இனிய வேதாத்ரிய பயணிகளே
வாழ்கவளமுடன்
சில வாரங்களுக்கு முன் ”யோகமும் மனித மாண்பும் “ ஆழியார் தேர்வு முடிவுகள் வந்தன அதனை தொடர்ந்து பல்கலைக கழக முடிவுகளும் நேற்று ( 10-09-2014 ) வந்தன .தேர்வுகளை நடத்த சேவை செய்த அனைத்து அருட்தொண்டர்கள் , கல்லூரி ஆசிரிய பெருமக்கள் அனைவரையும் வாழ்த்தி ,நன்றி தெரிவித்து கொள்ளலாம்.வாழ்க வளமுடன் .
நன்றி.
அனேகமாக மிக சாதரண அணுகுமுறை உணர்வோடு ஏனைய கல்வி போல ,பயில வந்து சேர்ந்த அன்பர்கள் பலரும் இங்கு வாரம் மூன்று நாள் கலை 5.30 மணிக்கு வகுப்புகள் ,மாதம் ஒரு சிறப்பு பயிற்சி , கைவலிக்க அஸைன்மெண்ட்கள் ,இறுதியாக இண்டெர்னல் எளியமுறை உடற் பயிற்சி மற்றும் யோக பயிற்சிகள் தேர்வு ,ஆழியாரில் – எழுத்து மற்றும் எளியமுறை + யோக பயிற்சிகள் (மூன்று இனிய நாள்! ) இறுதியாக எழுத்து தேர்வுகள்.என சரமாரியாக சவால்களை சந்தித்தார்கள்
பல அலுவலகங்களில் தேர்வு எழுத விடுமுறை கேட்டால் , இப்படியும் பொய் சொல்வார்களோ என்ற ஓர சிரிப்புடன் அனுமதி பெற்று ! தேர்வு எழுத போக படித்து ,வெகு நாளைக்கு பிறகு தேர்வு நுழைவு சீட்டு வரிசைஎண் கண்டு பிடிக்க ஓட்டம் … இத்தனை நடந்தாலும் இதில் ஒரு சுவாரஷ்யம் என்னவென்றால் பல வீடுகளில் குழந்தைகள், தேர்வு எழுதும் பெற்றோர்களுக்கும் அல்லது மூத்த சகோதர சகோதரிகளுக்கு வாழ்த்து சொல்லி அனுப்பிவைத்த விசயம்தான். இதில் பல பெற்றோர்கள் தேர்வில் அதிக மனப்பாடம் ஆகாமல் தவித்து இதை போலத்தானே என் குழந்தையும் கஷ்டபடுவான் . இனி குழந்தைகளை படி படி திட்டமாட்டேன் என சங்கல்பம் எடுத்து கொண்டதை பார்த்த போது – வேத்தாத்ரிய கல்வி ,தேர்வை விட வாழ்வில் வெற்றி பெற்று விட்டதை பார்க்க முடிந்தது . குருவினால் ஏற்பட்ட அற்புதம் !
வெற்றி பெற்றவர்கள் மற்றும் ஏதேனும் சில காரணங்களால் தேர்வு எழுதாமல் போனவர்களுக்கும் இந்த உள்ளுணர்வு கல்வியின் பயன் கருவமைப்பில் பதிவாய் போய் சேர்ந்து இருக்கும் .வருங்காலம் முழுதும் அதனால் எண்ணங்களாக செயலாக மலர குருவின் அருள் தொடர்பு கிடைக்கட்டும் அதோடு இல்லாமல் அவரவர் தகுதிக்கேற்ப்ப கல்வியை தொடருங்கள் மன்றங்களோடு தொடர்பு எப்போது அவசியம் .வெளியுலக தொடர்பும் வாழ்வின் நோக்கமும் பிரிக்க முடியாதது அதில் தொடந்து வெற்றி பெற தொடர்ந்து உற்சாகமும் ஊக்கமும் பெற மேலும் தொடர்ந்து படியுங்கள் ..இளங்கலை ,முதுகலை ,அட்வான்ஸ் டிப்ளோமா என பட்டங்கள் உங்களுக்காக காத்து இருக்கிறது .தொடருங்கள் .
பிரபஞ்ச காந்தம் – ஜீவகாந்தமாக தன்மாற்றம் அடைந்து நடத்தும் திருவிளையாடல்களை மகரிஷி வழியில் மேலும் மேலும் ஆராய்ந்து எளிமை படுத்தி உணர்ந்துகொள்ளும் தன்மைக்கு விஞ்ஞான விளக்கத்தை வடிவமைத்து தெரிவிக்கும் ஆற்றலை தமிழ்கூறும் நல்லுலகம் மற்றும் இந்த பிரபஞ்ச மனிதர்கள் ஒவ்வொருவரும் அறிய வழிவகை செய்ய சங்கல்பம் எடுத்து கொள்ளுங்கள்.உடற்பயிற்சியும் ,தவமும் ,தற்சோதனையும் இடைவிடாது தொடர வாழ்க்கை அனுபவங்களாக அவற்றை மாற்றிகொள்ளுங்கள் ஒரு குறிப்பிட்ட பக்குவம் உணர்ந்த்வுடன் அருகில் உள்ள மன்றங்களுக்கு சேவை கரம் நீட்டுங்கள் .சேவை பிரபஞ்ச கருமையத்தின் முகவரி.
முடிவாக தலைப்பை பற்றி …குருவின் அவசியம்
தந்தை தாய் ஈருடல் சேர்ந்து ஒரு அழகிய ஐம்பூத பானை போல சமூக உதவியுடன் நம்மை இந்த உலக தரிசனத்தை அனுபோகிக்க பூலோக நந்தவனத்திர்க்கு தந்து இருக்கிறார்கள் .அந்த பானை பல பேரின் ஆயுளில் காற்று மட்டுமே நிரம்பி கடைசிவரை பயணிக்கிறது ,பல பேர் தீர்த்த குடங்களாகவும் ,சில பேர் அமுதம் நிரம்பிய குடமாகவும் சென்று முழுமை பெறுகிறார்கள் குருவின் துணை இதர்க்கு உதவி செய்து இருக்கிறது .இன்னும் சொல்ல போனால் பெற்றோரை மதிக்க சொல்லி தந்ததே குருவின் முதல் வழிகாட்டல் மூலம் உணர்ந்தோம் .
நம் அருட்தந்தை வேதாத்திரி மஹரிசி விஞ்ஞானத்தையும் -மெய்ஞானத்தையும் இணைக்க தன் வாழ்நாளை முழுவதையும் அர்பணித்து பாதை அமைத்து தந்து இருக்கிறார்.அதில் பயணிக்க நம்மை தந்தால் போதும் .கை பிடித்து அழைத்து செல்ல வான்காந்த சக்தியாய் நமக்காக காத்து இருக்கிறார்.உங்கள் இடர்பாடுகளை அவர்களிடம் அவரே களைவார் என்று ஆழமாக நம்புங்கள் .
மேலும் ஒரு சின்ன வேண்டுகோள்
பல அன்பர்கள் அறிமுக வகுப்புகள் ,அகத்தாய்வு நிலைகள் ,அருள்நிதியர் பயிற்சி இல்லாமல் ( அத்தனையும் இதிலே அடங்கும் , இருந்தாலும் ) கல்வியாக மட்டுமே முழுமை நல வாழ்விற்க்கு யோகமும் மனித மாண்பை கற்றவர்கள் ,குருவின் முழுமை உணர்வை மேலும் பெற தொடருங்கள் .இது ஒரு அனுபவம் மட்டுமல்ல ஆன்ம விழிப்புணர்வு பயிற்சி .இதை கெட்டியாக பிடித்து பயணத்தை தொடருங்கள் வாழ்க்கை காத்து இருக்கிறது உங்களுக்காக !
அனைவரும் உங்கள் இந்த கல்வி அனுபவத்தை ( தேர்ச்சி இல்லாமல் இருந்தாலும் பரவாயில்லை ) உங்கள் அன்பு குடும்பத்திர்க்கு அர்பணியுங்கள் .நான் கடந்த இரு மாதங்களுக்கு முன் எங்களை விட்டு பஞ்ச பூதத்தில் கலந்த , தாய் அமராவதிக்கு சமர்பிக்கிறேன்.
வாழ்க வையகம் வாழ்க வையகம் வாழ்க வளமுடன்.
Leave a Reply