வாழ்வில் குரு என்பவர் பற்றி ஒவ்வொருவருக்குள்ளும் பல கேள்விகள் புதைந்து கிடக்கின்றன . அறியாத வயதில் வித்தைக் கற்றுக் கொடுப்பவரும் , உலகம் தெரிந்தவயதில் தொழில் கற்றுக் கொடுப்பவரும் ,ஓரளவு வாழ்வைப் புரிந்த வயதில் வாழ்வியல் சீக்கலைத் தீர்க்கும் உபாயம் சொல்பவரும் குருவாகவே மதிக்கபடுகிறார் …இவர்கள், தான் கற்றவற்றை மட்டும் உங்களுக்கு போதிக்கவில்லை. தான் படித்தது பார்த்ததை கேட்டதை தன் அறிவில் உணர்ந்ததை என்ற அனுபவகளின் மூலம் கிடைத்தவற்றை கொண்டு உங்களுக்கு வழிகாட்டும்போது சில சமயம் அது நடைமுறையில் மேலே தூக்கி வீசபட்டக் காசு தரையை அடையும்போது பூவாத் தலையா என்பதை போல, வெற்றியும் தரலாம் தோழ்வியும் தரலாம்.ஆனால் வாழ்வின் மத்திய பகுதியில் ஓரளவு உலக இன்ப துன்ப அனுபவமும் கடந்து விட்ட பின்பு இதை எப்படி ,யார் மூலம் தீர்ப்பேன் என்று ஒரு கேள்வி வருகிறதே அதாவது மேலே வீசபட்டக் காசு தரையைத் தொடாமல் காணாது போன சமயம் ஒரு கேள்வி வருமே … அப்போது அந்தக் கேள்விதான் குரு.
குருவின் தேவை.
அறுபது வயதைக் கடந்த பெரியவர் தனது பெண்ணை மிகப் பாசத்துடுடன் வளர்த்து மிகப் பல இடங்களில் தேடி அத்தனை பொருத்தமும் பொருந்திய வரன் பார்த்து, முடித்த திருமணத்தில், பல தீர்க்க முடியாத குழப்பத்தைச் சந்திக்கும்போதும் எங்குத் தவறு நடந்தது என்று மனசைக் கேள்விகள் குடையும்போதும்
சரியான நேரத்தில் முழு ஆள் மற்றும் பொறுள் பலத்துடன் தொடங்கிய கட்டிடத்தின் முழுமை அடைய முடியாமல் க்ரஹபிரவேசம் செய்ய முடியாமல் வேதனைப் பார்வையில் என்ன குறை என்று தன்னைத் தானே குறைபட்டுத் தவிக்கும்போது,
பல வருடம் பல கஷ்ட நஷ்டங்களில் பங்கு கொண்டு கூடவே இருந்த பல வருடப் பங்குதாரரின் போக்கில் பிரிந்துப் போகும் அளவுக்குத் திடீர் மாற்றம் காணும்போதும் ,
தன் வாழ்வின் அத்தனையும், குடும்பம் குடும்பம் என்று சதா அர்பணித்து இருந்தவகளின் கடைசிக் கட்ட வாழ்க்கை முதியோர் இல்லத்தில் இருக்கும்போது என்ன தவறு செய்தோம் என்று திரும்பிப் பார்த்து விடைக் கிடைக்கமால் வளர்த்தவர்களுக்கே சாபம் கொடுத்துக் கொண்டு இருக்கும் பொறுக்க முடியாத பெற்றோர் எனும் நடமாடும் தெய்வங்களின் வேதனையும் ,
எத்தைனையோ வெற்றிப் பெற்றாலும் அவ்வளவு வெற்றிக்குப் பிறகும் பல சாதனையாளர்கள் தனது வாழ்க்கையில் ஒரு இடத்தில் திரும்பிப் பார்க்கும் போது குறிக்கோள் மட்டுமே அடைந்துத் தனக்கு வேறு ஏதோ ஒரு நிறைவை வாழ்வில் தொலைத்த சோகம் பிடுங்கித் திங்குமே அப்போதும்,
அன்பு வைத்தவர்களின் மரணத்தின் பிரிவு ஏன் என்ற மனம் அழுந்தித் தவிக்கும்போதும் , எத்தனை மருத்துவர் பார்த்தும் தீராதா கவலையின் கடுமையும் சந்திக்கும்போது ..
இப்படியான இன்னும் பல்லாயிரம் வாழ்க்கைக் கேள்விகள் தான் – தனது – என்னால் என்ற முனைப்பின் எல்லைகளுக்குள் கிடைக்காத வாழ்கையின் முடிச்சுகளுக்குப் பதிலை வெளியே தேடும்போது அந்தக் கேள்விகள் குருவின் திசை நோக்கியும் அவரின் முக்கியத்துவத்தினையும் சொல்கிறது .ஆனால் ஒரு நல்ல குரு அந்தப் பதிலை நம்மிடம் இருந்தே நமக்குப் பெற்றுத் தருகிறார் என்பது ஓர் அபூர்வ உண்மையும் வேடிக்கையும்கூட என்பதை வேறு ஒரு இடத்தில் புரிந்து கொள்வோம்..
இதில் இன்னொரு புண்ணியவான்கள் இருக்கிறார்கள் .அவர்கள் பக்தி யோகத்தில் பழுத்த பிறகு தான் எங்கோ நிற்கிறோம் கடந்து போக வேண்டிய பாதை ஒன்று இருக்கிறது என்று குருவின் அவசியத்தை தேடுபவர்கள்கள் …
இன்னும் ஒரு கரு(வமைப்பில்)வில் திரு என்ற கூட்டம் உண்டு .பிறவியே ஞான மார்கம் என்ற ரீதியில் குருவை தேடுபவர்கள் .முன்னோர்கள் பூண்ணியத்தை அனுபவிக்க வந்த அவர்கள் குருவின் தேடலும் , அத்தனையின் நோக்கமும் ஒன்றுதான் அது வாழ்வு எனும் மதில் சுவர்க்கு அப்பால் இருக்கும் ஏதோ ஒன்று இருக்கிறது அதை புரிந்து கொள்வதுவேயாகும்
சரி குருவின் தேவை புரிகிறது .யார் குரு ? அடையாளம் என்ன ? நாம் நம் அத்தனை பிரச்சனையும் அவரிடம் சொல்ல வேண்டுமா அல்லது அவரே அறிந்து கொள்வாரா அப்படி அவர் ஏதாவது அற்புதம் நிகழ்த்துபவரா ? அதைவிடவும் அவர் நமது வாழ்கையின் சகலப் பிரச்னைக்கும் தீர்வுச் சொல்லுவாரா ? ஒருவேளை அல்லது எல்லாமே விதி என்று கை கழுவி விட்டுவாரா ?
கேள்விகள்தான் ஓர் ஆன்மாத் தன்னைப் பற்றி அறிந்து கொள்ளச் செய்யும் முதல் முயற்சியின் விளைவு .இன்னும் எளிதாக சொல்ல வேண்டுமானால் எங்கிருந்து இந்த ஆன்மா அல்லது உயிர் அல்லது சக்தி வந்ததோ அந்த இடத்தை அடைய தன்னை தயார் செய்து கொள்கிறதோ அப்போதுதான் கேள்வி பிறக்கும். இங்கு கேள்விகள் ஆன்மாவினுடையது .சந்தேகம் ஏற்கனவே பதிந்துள்ள மனதின் அனுபவம் என்ற ஒன்றை மட்டுமே நம்பும் இறந்த காலத்திர்க்குரியது.எனவே ”கறை” நல்லது என்ற விளம்பர வார்தயை போல கேள்வியும் நல்லதுதான் அதிலும் மனதை தாண்டிய முதன் முதலிலாக ஒரு கேள்வி வருமே அதுதான் ஆன்மாவின் தன்னை அறியும் முயற்சி.பிரபஞ்சத்தின் குரல் அது.
ஆனால் எப்போதுமே எந்த செயலிலுமே ஒரு கேள்வி எழும்போதே ஒரு பதில் வரும் ,அதை மதிப்பதில், மிக முக்கியத்துவம் இருக்க வேண்டும் .ஒருவரை பார்க்க நீங்கள் கிளம்புகிறீர்கள் என்று வைத்து கொள்வோம் , அவர் இப்போது இருக்கமாட்டாரே அல்லது இப்போது வேண்டாம் என்றோ ஒரு குரல் வரும் அதுதான் அவருக்கும் நமக்குமிடையே இயற்கை பிணைப்பு .ஆனால் உடனே மனசின் தேவை உணர்வு மேலோங்கி, போய்தான் பார்ப்போமே என்று சொல்லுமே அதை கேட்டு அங்குபோனால் அது வேறொரு விளைவை தரும்.ஆனால் தேவையின் பொருட்டு பல சமயத்தில் அதர்கே நாம் மதிப்பு தருகிறோம் .
எனவே நம் இப்போதைய பாதை எதுவாக இருந்தாலும் அதை பற்றி ஆனால் நோக்கம் முழுமைப்பேறு .அதை நோக்கிய பயணத்திர்க்கு குருவின் திருமேனியை கண்டு அவரின் பெயரை வாழ்த்தி அவரின் அருள்வார்தைகளை மதித்து அவர் உருவை சிந்தித்து பின்பற்றுவோம் ..வாழ்க வளமுடன் .குருவின் அருள்.
Leave a Reply