ஞானம் பெற்றவர்கள் என்ன செய்தார்கள் ?

 

படம்

                                         ஒரு சமயம் நானும் என் நண்பரும் சுடுகாட்டு வழியாக ( பகலில்தான் ) தமிழின் அருமை மற்றும் தவம் பற்றியும் மிக புத்திசாலிகள் மாதிரி பேசிகொண்டு போய்கொண்டு இருந்தபோது , எங்கள் பின்னாடியே வந்து கொண்டு இருந்த யாரோ ஒருவர் – சில அடிகள் முன்னேறி தம்பிகளா அதனால்தான் ’தமிழுக்கு இருவர் தவத்திர்க்கு ஒருவர்’ என்று சொல்லி விட்டு போனார் .யார் சொன்னது என்பதை கூட இருவரும் ஆராயவில்லை ஆனால் ஒருவர் இருவர் என்ற அந்த ‘ரைமிங் ‘மனசுக்குள் வெகு நாளாக ஏதோ பண்ணிகொண்டே இருந்தது .தவம் செய்ய போன பின்னர்தான் இதன் அர்த்தம் உணர்விலிருந்து அறிவுக்குள் பயனித்தது .

 

                          படம்                                  எவ்வளவுதான் தமிழில் பாண்டித்தியம் பெற்று இருந்தாலும் அதை மற்றொருவருடன் பகிர்ந்துகொள்ளும்போது அது இன்னும் சிறப்பாக தெரிவதோடு பேசும் மொழி பிரம்மத்தின் வெளிப்பாடு என்ற அர்த்தம் முழுமையடைகிறது .எனவே தமிழை பேசும்போது , விவாதிக்கும்போது , ஏதோ ஒரு படைப்பாக வெளிபடும்போது சொன்னவர்க்கே அது ஒரு தெளிவை தருகிறது .எனவே தமிழ் இறைவனோடாவது அல்லது இறைவனை பற்றியாவது பேசவேண்டும் என்ற கட்டாயத்திர்க்கு உரியது .

படம்

               ஆனால் தவம் தன்னை, தன் உயிரின் மேல் கவனிப்பை செலுத்தி அதன் மூலம் பிரம்மத்தை உணர்வது .இதர்க்கு பல மார்க்கம் இருந்தாலும் .தவம் – அறிவு – ஞானம் அதை அடைவது தனியே அவரவர் ,அவர்களுக்குள்ளே முயற்சிக்க வேண்டும் . இதையே எத்தனை பெரிய ஞானிகளோடும் அறிவாளிகளொடும் கைகோர்து கொண்டு சுத்தினாலும் வாய்க்காது என்பதை அந்த வார்த்தை உணர்த்தியது .

படம்

                           சரி ஞானம் என்பது அடைந்தவர்கள் இது தான் ஞானம் என்பதை எப்படி உணர்ந்தார்கள் .அப்போதெல்லாம் தவம் செய்கிறேன் என்ற பெயரில் ஒரு வெறித்தனதில் , யார் மீதோ கோபித்துக்கொண்டு யார் சொன்னதையோ கேட்டுக்கொண்டு உலகத்தை வெறுத்தது போல தன்னை காட்டிக்கொண்டு காட்டுக்குள் போய் திரும்பி வரும்போது பித்தம் தலைக்கேற பிணாத்தியவர்களும் உண்டு .அவர்கள் மாதிரி சரியான வழிகாட்டால் மற்றும் குரு இல்லாததால் அவர்கள் எழுதிவைத்ததை அல்லது சொல்லி வைத்ததை கேட்டுத்தான் தவம் பண்ணிணால் குடும்பத்தை விட்டு காட்டுக்குள் ஓடிவிடுவார்கள் என்று நம்பி கெட்டோம் பல காலம் .இப்போது டாக்டர்கள் ”ப்ரஸ்கிரிப்சனில் – மெடிடேசன்” பண்ணுங்கள் என்று எழுதி தரும் நிலை வந்து விட்டது .இப்போது பித்தம் தலைக்கு ஏறியதால் அதை இறக்க மெடிடேசன் பண்ணபோகிறோம் நாம் .

 படம்                           சரி இந்த கேள்விக்கு வருவோமே – இது தான் ஞானம் என்பதை எப்படி உணர்ந்தார்கள் ? ஒருவன் ஞானம் அடையப் பெற்றிருப்பதற்கு இரண்டு அறிகுறிகள் இருக்கின்றன.  முதலாவதாக எக்காரணத்தை  முன்னிட்டும் அவன் துன்பம் அடைவதில்லை . அவன் பெற்ற ஞானத்தால் உலகத்தையே புதிய நோக்கில் பார்க்கத் தூண்டும். அவருக்குள் புத்துணர்ச்சி பெருகும். அவன் புதுப்பிறவி எடுத்து புதிய மனிதனாக உலவுவார்கள். ஞானக்கண் மனிதனை உள்முகமாகப் பார்க்கத் தூண்டும் என்று சாஸ்திரங்கள் கூறுகின்றன. எல்லா உயிர்கள் மீது அன்பு கருணையும் ஏற்படும்.மற்றொன்று எல்லையில்லா சுத்தவெளியே இறை .அதனை உணரவே மற்ற வழிபாடுகள் அனைத்தும் என்பதை அறிவின் துணையோடு உணர்கிறான் .

படம்

                   சரி ஞானம் உணரப்பட்டு விட்டது .இனி அதன் பயனை எல்லோரும் நேரடியாக அனுபவிக்க வேண்டும் என சொன்னவர்கள் குறைவுதான்.அதர்க்கு பதிலாக இந்த உயிர் ,உடல் கொடுத்த பூமிக்கு எதாவது செய்ய நினைத்து மருத்துவம் , சோதிடம் , சுவடிகள் , என பல கலைகள் மேல் கவனம் செலுத்தினார்கள் .அதன் விளைவை பல தரப்பில் நாம் அனுபவித்து வருகிறோம் நிறைய இழந்துவிட்டோம் என்பது வேறு விசயம் .வேறு சிலர் அன்றைய மன்னர்கள் மாறினால் மனிதர்கள் வறுமை, பிணி ,பாதுகாப்பான வாழ்வு மலரும் என்பதர்க்காக அவர்களை நாடி சென்று போதித்தார்கள் .அவர்களே ஞானிகள் என்பவர்களும் ,சித்தர்கள் என்பருமாக நாம் பிரித்துக்கோண்டோம் .பிரம்மத்தின் சூத்திரத்தை உணர உணர உயிர்களின் படைப்பு , ஜட பொருள்களின் இயக்கம் , விண் ஞானம் கடந்த மெய் விளக்கம் பூமியில் அவர்கள் மூலம் வளர்ந்தது…எனவே ஞானத்தின் கடமை அதை செயலுக்கு கொண்டுவருவதும் தன்னை போல மற்ற உயிகளின்மேல் அன்பு செலுத்தி தன்னால் இயன்றதை செய்வதுமே ஞானத்தின் மேன்மை .

விலகி நின்று ரசிக்கும் போது வாழ்க்கைப் பயணம் நிறைவாகப் போகிறது ...

Tagged with: ,
Posted in ஆன்மீகம்
4 comments on “ஞானம் பெற்றவர்கள் என்ன செய்தார்கள் ?
  1. […] ஞானம் பெற்றவர்கள் என்ன செய்தார்கள் ?. […]

  2. Yusaf Ali says:

    சஹோதரர் கிருஷ்ணமூர்த்தி உங்களை போல் தோழர்கள் இருக்கும் வரையில் நாம் என்றும் அண்ணன் தம்பிகள்தான்

  3. புதிய பதிவு எதனையும் காணவில்லையே.தொடர்ந்து எழுதுங்கள் நண்பரே!
    நல்வாழ்த்துக்கள் உரித்தாகட்டும்.

  4. எனது ஆன்மீக அனுபவங்களுக்கும் பயணத்திர்க்குமே இந்த தளத்தை பயன் படுத்துகிறேன் மீதியெல்லாம் http://myowndebate.blogspot.in/ பகுதியில் உலாவுகிறேன் .

Leave a reply to ஞானம் பெற்றவர்கள் என்ன செய்தார்கள் ? | பிரபஞ்ச நடனம் Cancel reply