ஞான மலர்கள்.

           படம்       கடவுளின் தூதர்களாக ஞானிகளை மதிக்கிறோம் .ஞானிகள் பிறக்கிறார்களா அல்லது தனக்குள் தன்னை தேடி உருவாக்கி கொள்கிறார்களா என்பது தீராத கேள்விதான் .அதைவிடவும் பெரிய கேள்வி ஞானிகள் என்பவர்கள் யார் என்பதே ! அப்படிப்பட்ட தேடல் எனக்குள் மொட்டாக இருக்கும்போதே இரண்டு ஞானிகளை  தரிசித்து விட்டேன் .

                      படம்

   முதலாமவர் காஞ்சி பெரியவர் .அவருக்கு கனகாபிஷேகம் பண்ணிய சமயம் என நினைக்கிறேன் .காலை சுமார் பத்து மணி அளவில் இந்த இடத்திர்க்கு அழைத்துவருவார்கள் என்று சங்கர மடத்தின் உள்பகுதியில் ஒரு சிறு மேடையை காட்டினார்கள் .காத்து இருந்தோம் .சுமார் 10:10 ஏறக்குறைய தூக்கிகொண்டு வந்தார்கள் .மிக பெரிய லென்ஸ் கண்ணாடி அணிவித்து இருந்தார்கள் .எல்லோரும் அனுமதிக்க படவில்லை .சின்னவர் (அப்போது ) ஜெயந்திரர் மடத்தில் இருந்தார் .ஆனால் பார்க்க முடியவில்லை.எல்லோரும் இவரை ஞானிகள் என்கிறார்களே என்னவென்று உற்றுப்பார்த்துவிட்டு வந்தேன் .

                  படம்

       அதே காஞ்சி மடத்தின் சார்பில் ஜயேந்திரர் அவர்களால் துவங்கப்பட்ட இரு அமைப்பில் (ஜன் கல்யாண் மற்றூம் ஜன் மோச்சா என நினைக்கிறேன் ) தந்தையின் நண்பர் இருந்தார் .அவரிடம் நான் வேலை பார்த்துகொண்டு இருந்தமையால் அவர்  சார்பில் திண்டுக்கல் அபிராமி அம்மன் கோவிலுக்கு வந்து இருந்த வாரியார் சுவாமிகளுக்கு மாலை அணிவித்து கால் தொட்டு வணங்கும் வாய்ப்பை பெற்றேன்.ஒரு கனிந்த பழத்தை தொட்டது போல இருந்தது அவர் பாதங்கள்.

 படம்

                        பிறகு சில வருடங்கள் கடந்த பிறகு வயதுக்குரிய ஒரு புரியாத தன்மையில் 19 வயதில் சின்மயானந்தர் கருத்துக்களின் ஈர்ப்பால் அந்த மடத்தோடு தொடர்புகொண்டு மடத்தில் சேர அனுமதி கோரினேன் .ஒரு வாய்பு தந்தார்கள் .அப்போதும் திண்டுக்கல் நாகா தியேட்டர் பின்புறம் உள்ள ஒருவர் வீட்டுக்கு வந்த மடத்தின் சீடரால் நேர்முகம் காண சென்றபோது .அவர் ஏன் இங்கு வர ஆசைப்பட்டீர்கள் என்பது போன்ற பல கேள்விகள் கேட்டார் .விடைபெறும் முன் நான் அவரிடம் ஞானிக்குரிய தகுதி எது என்றேன் .இந்த வீட்டுக்குள் நான் வரும்போது என் பாதங்களை கழுவி , மலர்கள் தூவினார்களே அதை ஏற்றுகொண்டது போல அவர்கள் என்னை கல்லால் அடித்தாலும் ஒரே பக்குவ நிலையில் நான் ஏற்றுகொள்ள வேண்டும் இதுவே ஞானத்தின் முதல் படி என அன்பாக பதில் அளித்தார் .இந்த(   மடத்தில் சேரபோவது பற்றி ) விசயத்தை , வேறு ஆன்ம தொடர்புள்ள ஒருவரிடம் சொன்னபோது என்னை  போகவேண்டாம் அதர்க்கு பதிலாக பல தொண்டு வாய்ப்புகள் இருக்கிறது என்று என்னை தடுத்துவிட்டார் .அப்போது திண்டுக்கல் மனவளக்கலை மன்றத்தில் அருள்நிதி  பயிற்சிகூட முடிக்கவில்லை .ஆனால் தடுத்தவர்  திண்டுக்கல் மனவளகலை மன்றத்தின்( அன்றைய ) அருள்நிதி தாமோதரன் அவர்கள்.இன்று அதன் மூத்த பேராசிரியர் ( Sr.Prof.M.K.Dhamodharan -SELECTION OF MASTERS AND TRAINING WING OF THE WORLD COMMUNITY SERVICE CENTRE  ) பிறகு

                    படம்

  எதர்க்காக காலம் காத்து இருந்ததோ அது நடக்க ஆரம்பித்தது .நண்பர் ஒருவருக்கு உடல் நலம் சரி இல்லாத காரணத்தால் திண்டுக்கல் (இயற்கை) சூழல் விட்டு கடல் சார்ந்த நகரம் ஏதோ ஒரு  நகரம் போக சொல்ல ,அவருக்காக அவர் வீட்டில் கேட்டுகொண்டதால் புதுவை (உள்ளே நுழைந்தால் இந்திராகாந்தி அம்மையார் சிலைக்கு வலதுபுறம் ) குண்டு சாலையில் குடியேறினோம் .ஏற்கனவே பாலகுமாரன் படிப்பதில் ஒரு வெறித்தனம் இருந்தது எனக்கு .பாலாவின் எழுத்தெல்லாம் எனக்காக மட்டுமே எழுதியதாக ஒரு பிரம்மை .அவர்  சொன்னதெல்லம் அந்த வயதுக்கு அப்படியே  பின்பற்றினேன் .அதில் ஒன்று திருவண்ணாமலை விசிறி சாமியார் என்ற யோகி ராம் சுரத் குமார் தரிசனம்.புதுவையிலிருந்து திருவண்ணாமலை அருகாமை என்பதால் போனோம் .அப்போது அவருக்கு மடம் கட்டபடவில்லை .ஒரு வீட்டில் இப்பொது மடம் கட்டியிருக்கும் பகுதியில் இருந்தார் .எனது பிறந்த நாளை வைத்து கொண்டு ஆசீர்வாதம் பெற நண்பர் சொன்ன யோசனைப்படி போனோம் .மதியம் 3 மணி இருக்கும் .உள்ளே பஜன் நடப்பதால் அனுமதி மறுக்கப்பட்டது .உடன் வந்த நண்பர் எனக்கு பிறந்த நாள் என்றதும் அனுமதித்தார்கள் .பஜனில் யாரோ பார்த்த முகம் மாதிரி இருந்தார் .யாராக இருக்கவேண்டும் என்று யோசித்து கொண்டு இருக்கும்போதே பஜன் முடிந்து அழைக்கப்பட்டோம். கொண்டு சென்ற பழங்களை முன்வைத்தேன் .உட்கார்ந்த நிலையிலிருந்தவரிடம் பாதங்களை பணிந்தேன் .”ராம் ராம் ராம்”என்று சொல்லிக்கொண்டே முதுகை தட்டி  ஆசீவதித்தார்.அவரின் அந்த கண்கள் எனது உள்ளே தீட்சன்யமாக எதையோ தேடுவது போல உணர்ந்தேன் .

                          வெளியே வந்த பிறகு ஞாபகம் வந்தது நான் உள்ளே பார்த்த ( பார்த்த முகம் மாதிரி) அவர் பத்திரிக்கையாளரும் முதல்வர் எம்.ஜி.ஆர் அவர்களின் நண்பருமான திரு .மணியன் அவர்கள் .

சரி இவர்களை பார்த்துவிட்டொமே இனி நாமும் ஆன்மீக தேடலை தொடங்கி சில மைல் தூரம் போவேன் .பிறகு வாழ்கையின் ஏதொ ஒரு விசயத்துடன் கலந்து நின்று விடும் .பிறகு ஒஷோ ஒரு நாள் தியானம் அதில் உள்ள அத்தனை விசயமும் வேகமும் பிடித்து போக அதுவும் சில நாள் .ஆனால் ஆறாத ரணம் போல வெகு தூரத்தில் மனம் தேடிகொண்டே இருந்தது .அதையும் இது அல்ல அது என தவ்வி இடம் பெயர ..புத்தகங்களுடன் என்னை சமாதானப்படுத்திக்கொண்டு பழக தொடங்கினேன் .அதுதான் முடியாதே !

படம்

                    மீண்டும் மனவளகலை 10 வருடங்கள் தொடர்பு விட்டு போய் விட்டது.இதர்க்கு இடையில் அருள்நிதி சான்றிதல்காணோம் .எப்படியோ கிடைத்தவுடன் ,மீண்டும் ஒருமுறை முயர்சிப்போம் என திருப்பூர் சாமுண்டிபுரம் மன்றம் போனேன் .கேட்க சங்கடம் .இருந்தாலும் உடற்பயிற்சி மட்டும் சேர்ந்து கொள்ள அனுமதியும் அதர்க்கு கட்டணம் கேட்டேன்.அங்கு பொறுப்பி இருந்தவர் உள்ளே வகுப்பு நடக்கிறது கொஞ்சம் பொறுங்கள் என்று சொல்லி காத்து இருக்க சொல்ல ,வகுப்பு முடிந்து வெளிவே வந்த ஆசிரியர் பஸ் ஸ்டாண்ட் அழைத்து செல்ல ஆள் இல்லை .நான் போகிறேன் என்றதும் ,மீண்டும் அங்கிருந்த பொறுப்பாசிரியர் மாலை பார்க்கலாம் என்றார் .அந்த ஆசிரியரை விட்டு விட்டு நூலகம் போய் விட்டு திரும்பி வீட்டுக்குள் போக வண்டியின் பக்கவாட்டில் மாட்டி இருந்த நூலக புத்தகம் ,அருள்நிதி அசல் சான்றிதல் பையை காணோம் .

படம்

மீண்டும் சில மாதங்கள் நாமே அருள்நிதி எப்படி சொல்வது ? தயக்கத்துடன் ஒருநாள் மன்றம் போனேன் .அதே பொறுப்பாளர் .நீங்கள் இத்தனை வருடம் தாமதித்து வருவதால் ஏன் புதிய உறுப்பினர் போல ஆரம்பத்திலிருந்து தொடங்க கூடாது என கேட்டார் .ஏதோ ஒன்று எனக்குள் தடுத்தது .வீட்டுக்கு வந்து யோசித்தேன் .ஓ ! இத்தனை காலம் நான் அருள்நிதி என வெறும் பேப்பரை ( சான்றிதல் ) வைத்துக்கொண்டு அலைந்ததே எனது ஆன்ம ஞான தேடுதலின் தடை .தூக்கி எறிந்தேன் .

படம்

                      மீண்டும் இப்போது ஒவ்வொரு அகத்தாய்வாக மூன்றாம் நிலை வந்து விட்டேன் .இப்படி என்னை என் மன் கனத்தை இறக்கி வைக்க உதவிய ஞானி வேதாத்ரி மகரிஷியின் நினைவு தினம் .மேற்கண்ட இடத்தில்தான் அவர் கல்லறை இல்லை என் ஞான தேடலின் கருவறை.

விலகி நின்று ரசிக்கும் போது வாழ்க்கைப் பயணம் நிறைவாகப் போகிறது ...

Tagged with:
Posted in ஆன்மீகம்
One comment on “ஞான மலர்கள்.
  1. நல்ல தேடல்… வாழ்க்கையில் அனுபவம், வாழ்க்கையும் அனுபவம்… நிலை பெற வாழ்த்து!

Leave a Reply

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  Change )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  Change )

Connecting to %s

%d bloggers like this: