”பேய்” நல்லது தெரியுமா?

                           தமிழ் நாட்டில் யார் வேண்டுமானாலும் குடிக்கலாம் என்பதைப்போல இங்கு எவரை வேண்டுமானாலும் பேய்ப் பிடிக்கலாம் என்ற ரீதியில் தமிழ் படப் பேய்கள் கலந்துகட்டி நிற்கிறதுகள் ! கோலிவுட்டின் கதைப்பஞ்சத்துக்குச் சாத்தான் கொடுத்த வரம் போலப் பேய் என்ற கான்செப்ட்டை வைத்துப் படப் பண்ணும் ’பேய்க்கதைக்கரு’ நல்லா வேலை செய்கிறது .பொதுவா மேக்கப் இல்லாமல் சும்மா நடிச்சாலே பேய் மாதிரி இருக்கும் நடிககைகள் இதற்கெனெப் பிரத்தியோகமாகக் கயிற்றில் தொங்கி வேறு பயமுறுத்துகிறார்கள் . இதெல்லாம் விட எங்கும் கொலை,கொள்ளை நடக்கவில்லையென்றால் கேமிராவைத் தூக்கிக்கொண்டு சேனல்கள் அந்தக் கேரக்டர் பேய்களிடம் போய்ப் பேட்டிக் காணத்தொடங்கி விடுகிறார்கள் .

கேள்வி : இந்தப் படத்தில் நடித்த உங்க அனுபவம் எப்படி எங்கள் நேயர்களுக்காக பகிர்ந்து கொள்ளுங்கள் என்று இந்த பதில் தெரியாவிட்டால் தமிழகத்துக்கு அடுத்த நாள் சூரியனே வரமாட்டர் என்பது போல கேட்க,

 பதில் : நல்லாத் தமிழ் பேசத்தெரிந்தாலும் அந்த நடிகை,” யா, யா திஸ் இஸ் மை கிரேட் எக்ஸ்பிரியன்ஸ் யு நோ “என்பார்களே அப்போது அவர்களைப் பார்ப்பதற்குப் பதிலாக  நம்ம ஊர் முனியே சமத்துன்னு தோணுது . அது பாட்டுக்கு இரவு பண்ணிரெண்டு மணிக்கு மட்டும்தான் டாண்ணு வந்துட்டு, போய் விடுமாம்

                 ஒருபக்கம் நல்ல பேய்கள் ’டாய், பூய் ‘ன்னுக் கத்திக்கொண்டு கெட்ட வேலைகள் செய்கிறது. கெட்டப் பேய்கள் பழிவாங்கித் தீருவேன் என்ற கட்டிப்புரண்டு அழுகிறது .பேய்கள் மேல் உள்ள வீண் பயம்  தொலைந்துப் போவது நல்லதுதான் என்றாலும் இன்னொரு பக்கம் பேய்கள் பற்றி ஒரு அபிப்ராயத்தை ஏற்படுத்தும் அபாய முயற்சியில் தமிழ்ப் படங்கள் இயங்கிக்கொண்டு இருக்கிறது .

 

                            இப்படியே போனால் இன்னும் கொஞ்ச நாளில் தூக்குப் போட்டுச் செத்துப்போன , மருந்துக் குடிச்சு மாய்த்துக்கொண்ட, பெண் பேய்களை பசங்க தேடி போகும் பெருத்த அபாயம் தமிழ் சமூகத்திற்கு வாய்க்கலாம் .இனி என்ன பண்ணி என் மகனை மயக்கினாலோ என்று மருமகளைக் குறை கூறும் மாமியார்கள் கூப்பாடுப் போய், என்ன செய்து அந்தப் பேயை மயக்கினானோ என் பையன் என்று அழுது சாதிக்கலாம்.காரணம் தமிழ் படத் தயாரிப்பாளர்கள் சமூகத்துக்குச் செய்யும் மிக்கபெரிய நன்மை பேய்கள் கிளாமராக இருந்தே ஆக வேண்டும் என்ற தரையில் விழுந்துப் புரள்கிறார்கள்.தல கூட நடிச்சாலும் தளபதி கூட நடிச்சாலும் கிளாமர்தான் தலைவிதின்னு ஆணாதிக்க ஓவர்டோஸ் தாங்க முடியாத நம் தமிழ் நாயகிகள் பேய்களாக மாறிக் கிளாமரில் அள்ளிக்குமிக்கிறார்கள்! அவர்களின் தாராளத்துக்கு இங்குப் பச்சைக்கொடித் தெரியுதோ இல்லையோ தெலுங்குப்பட வாய்ப்புய்கள் பெரியத் தட்டில் லட்டுக் கொடுக்கக் காத்திருக்கிறது !.

                     நம்மத் தமிழ்ப் படத்தில் செத்துக் கொடுத்தான் சீதக்காதி என்பது கீழக்கரையைச் சேர்ந்த வள்ளலுக்குப் பொருந்துகிறதோ இல்லையோ பேய்களைத் துரத்தி துரத்திக் காட்டுகிற இயக்குனர்களுக்குப் பொருந்தும் ! உண்மையிலேயே பேய் பற்றிய அனுபவம் உள்ளவங்ககிட்டக் கேள்வி ஏதும்  இல்லாம அவங்க சொல்றதைக் கேட்டா சவுண்ட் எஃபக்ட்டோட கதை விடுவார்கள் .ஆனால் அப்போ நீங்க என்ன செஞ்சுகிட்டு இருந்தீங்கன்னு கடைசியிலக் கேட்டா முதல்ல இருந்து அதே கதையைச் சொல்ல ஆம்பித்து விடுகிறார்கள்..

 ..

இந்தப் பேய் சமாச்சாரங்களால் நடந்த நல்ல விசயங்கள் சிலவும் உண்டு தெரியுமா உங்களுக்கு ?

1. குழந்தைகள் இப்போதெல்லாம் சோறு சாப்பிடும்போது அம்மா சொல்லும் பூச்சாண்டிக்குப் பயப்படுவதேயில்லை .அது மட்டுமல்ல குழந்தை அப்பாவையும் பூச்சாண்டியையும் மாறி மாறிப் பார்த்து சிரிக்கிறது.

2.  ஸ்கூல் பசங்க இப்போல்லாம் அதைப்படி இதைப்படின்னுப் பயமுறுத்தினா ஏதாவது நிராசையிலச் செத்துப்போன பேய்ப் படப் பேர் சொல்லிப் பெற்றொர்களைப் பதிலுக்குப் பயமுறுத்துகிறார்கள்.

3. காதலில் தோற்றுப்போய்  யாரயோ திருமணம் செய்தவர்கள் இப்போதெல்லாம் நீண்ட நாள்  ஞாபத்தில் வைத்து அவஸ்தப்படுவதேயில்லை .காரணம் தெரியாத பிசாசை விடத் தெரிந்த பேயே பெட்டர்ன்னு மனதைத் தேற்றிகொள்கிறார்கள் .

4. வீட்டுப் பெருசுகளோட காலத்தில், ஜெயமாலினி போல வயதான நடிகைகள் பேயாக அடுப்புக்குள் கால்வைத்து எறித்துக்கொண்டு சிரித்த காலம் பின்னுக்குத்தள்ளப்பட்டு ,செம ஹாட்டான பேயாக த்ரிஷா. ஆண்ட்ரியா ,லட்சுமிராய் போன்ற கலைச்சேவகப் பேய்களால் கிறங்கடிக்கப்படும் பாக்கியம் பெற்று இருகிறார்கள் .

5. மிக முக்கியம் எல்லோருக்குமான நன்மையான இன்னொரு விசயம் ! தமிழே தெரியாத பல சுமாரான நடிகைகள் கூடப் பேய் மேக்கப்பில் மிக அழகாகத் தெரிகிறார்கள் என்பது கூடுதல் சந்தோசம் .அதிலும் விண்ணைத்தாண்டி வந்த ”வாத்வாக்”நடிகை ஆர்யாவுக்கா விசாலுக்கா என்று யாருக்குன்னே தெரியாத அளவுக்கு அந்த நாயகி – மோகினி என்று என்  கண்ணே பட்டும் அளவுக்குப் பேய் மேக்கப்பில் நடிக்கிறார்கள் இல்லை மனதைக் கரைக்கிறார்கள் ! . பெரிய பட்ஜெட் படமாம் லண்டனிலில் தயார் ஆவதால் இதற்கு நாம் அடிமைப்பட வாய்ப்புகள் எக்கசக்கம் !

சரி அவர்கள் கலைச்சேவை ஒருபக்கம் கிடக்கட்டும் .

உண்மையிலே பேய் இருக்க்க்க்க்க்கா ……?  

                        எனக்கும் இது தேவையான்னு தோணிச்சு. ஆனால் ஏதாவது ஒரு மெசேஜ் இந்த சமூகத்திற்கு வழங்கச்சொல்லி உள்ளுணர்வு சொல்லியதால் தட்டாமல் அடுத்த பதிவில் சொல்லி முடிக்கிறேன்.

”பேய்” நல்லது.. இரண்டாம் பாகம், மீண்டும் உங்களைப் பிடிக்க ! … வரும் !!

 

 

Posted in Uncategorized

அன்னை தெரேசா புனிதர் ஆனார் !

கடைசிவரைக் குழந்தையுள்ளத்தோடு வாழ்ந்த அன்னை தெரேசா
இன்று என்  முகநூலில் ஆக்னஸ் கோன்ஜா போஜாஜியூ என்ற அன்னை தெரேசா (’Mother Teresa, ஆகத்து 26, 1910 – செப்டம்பர் 5, 1997) படத்தைத் தாங்க பெருமைப்படுகிறது .
               அன்னை தெரசாவுக்குப் புனிதர் பட்டம் வழங்க, போப் பிரான்சிஸ் ஒப்புதல் தெரிவித்து உள்ளார். செப்., 4ம் தேதி , அவருக்குப் புனிதர் பட்டம் வழங்கும் நிகழ்ச்சி நடைபெற உள்ளது என்பதை அறிந்தபோது கொஞ்சம் வியப்பாக இருந்தது . அவர் ஆத்மா உலகை விட்டு பிரிந்து 19 ஆண்டுகாலம் ஆகியும் இன்றும் அன்பு என்ற சொல்லுக்கு அன்னை தெரேசாதான் என்று மனிதர்கள் மனத்தில் மரித்துப் போகாத உதாரணமாக அவர் வாழ்ந்து கொண்டு இருக்கிறார் ! அவர் இந்தப் பட்டத்தைப் பெறும் தகுதிக்கான ஆய்விலா இவ்வளவு காலம் இருந்தார் ?
 கத்தோலிக்கக் கிறிஸ்தவ மதத்தில்,அற்புதங்களை நிகழ்த்தியவர்களுக்குத்தான் புனிதர் பட்டம் தரப்படுகிறது .இது பல நூறு ஆண்டுகளாகப் பின்பற்றப்படுகிறது. “புனிதர்” என்ற வார்த்தையின் பொருள் விளக்கம் காண மூலமொழிச் சொற்கள் மூலம் சொல் விளக்கம் காண முயல்வதே சிறந்தது. புனிதம் அல்லது புனிதர் என்பதை எபிரேய மொழியில் “குவதோஸ்” என்றும் கிரேக்க மொழியில் “ஆகியோன்” என்றும் சொல்லப்படுகிறது. இதற்கு “பிரித்தெடுக்கப்பட்ட” அல்லது “வேறுபடுத்தப்பட்ட” என்று வார்த்தையளவில் பொருள்கொள்ள முடியும் இதுவரை, 3,000க்கும் மேற்பட்டவர்களுக்குப் புனிதர் பட்டம் வழங்கப்பட்டு உள்ளது.
         தனது வாழ்கையே அன்பின் வரலாறாக வாழ்ந்த அந்தத் தூய ஆத்மாவுக்கு இந்தப்பட்டம் ஏன் இவ்வளவு காலம் கடந்து வந்து இருக்கிறது என்பது கேட்க நமக்கு உரிமை இல்லை அதைக் கத்தோலிக்கக் கிறிஸ்தவச் சபைதான் முடிவு செய்யும் அது.
           உலகம் முழுவதும் மொத்தம் 123 நாடுகளில் நான்காயிரம் தன்னார்வு தொண்டர்களோடு கூடிய 600 சேவை மையங்கள் உருவாக்கப்பட்டு அவர் பெயரில் செயல்படும் போது இன்னும் என்ன தகுதியை எதிர்பார்கிறார்கள் ? இந்தப் பட்டத்தைப் பெற அன்னை தெரேசாவுக்கு என்ன தகுதி தேவைப்பட்டது ?
              அதற்கு நாம் புனிதர் தேர்வு எப்படி நடக்கிறது என்பதை அறிந்துகொள்ள வேண்டியிருக்கிறது. அது ஒருவர் இறந்து ஐந்து ஆண்டுகள் ஆன பின், அவருக்குப் புனிதர் பட்டத்துக்குத் தேர்வு செய்வதற்கான வேலைகள் துவங்குகிறது.
1. கத்தோலிக்கத் திருச்சபையால் புனிதர் பட்டம் அளிக்கப்படுவதற்கான நான்கு நிலைகளில், முதல் நிலை, ‘இறை ஊழியர்’ என அழைக்கப்படுவதைக் குறிக்கும். குறிப்பிட்ட பகுதியில் வசிக்கும் மக்களால் புனிதர் என நம்பப்படுவோரை, திருச்சபையால் ஏற்றுக் கொள்வதற்காக அளிக்கப்படும் முதல் பட்டமாக இது கருதப்படுகிறது.
2. பிஷப்பால் நியமிக்கப்பட்ட குழு, இறந்த நபரின் வாழ்க்கையை ஆய்வு செய்து, அவர் நற்பண்புகளை உடையவர் எனப் பரிந்துரை செய்ய வேண்டும். இதன்பின், அவருக்கு, ‘வணக்கத்திற்குரியவர்’ என்ற பட்டம் வழங்கப்படும்.
3. கிறிஸ்தவ நம்பிக்கையைப் பின்பற்றி, சிறப்பான முறையில் வாழ்ந்து மறைந்த ஒருவர், வானுலகில் இருக்கிறார் என்றும், மற்றவர்களின் நலனுக்காகக் கடவுளிடம் பரிந்து பேசும் சக்தி பெற்றவராக உள்ளார் என்பதை உறுதி செய்து, அதற்காக, அருளாளர் (முக்திப் பேறு) பட்டம் வழங்கப்படும்.
4. இந்த மூன்று நிலைகளும் முடிந்து, நான்காவது நிலையை எட்டிய பின், ‘புனிதர்’ பட்டம் வழங்கப்படும். இறந்த ஒரு மனிதர், அங்கீகரிக்கப்பட்ட புனிதர்களின் பட்டியலில் சேர்க்கப்பட்டுள்ளார் என்பதை இது குறிக்கும்.
புனிதர் பட்டம் பெற வேண்டுமானால் ஒருவர் இறந்த பிறகும் அவரை நினைத்துப் பிரார்தனை செய்து பலன் பெறுவதை அல்லது குணமடைவதை அற்புதம் (Miracle) என்கிறது கத்தோலிக்கத் திருச்சபை. அற்புதம் இந்த உலகின் எந்த ஒரு இடத்தில் வேண்டுமானாலும் நிகழ்ந்து இருக்கலாம் .ஆனால் அந்த நாட்டின் திருச்சபை அதை அங்கீகரித்துச் சம்பந்தப்பட்ட சபையின் பிஷப், ஒரு கமிட்டி அமைத்து ஆய்வு செய்து பின்னர் மேல்கமிட்டி அதைப் புலனாய்வு செய்து அதன் பிறகு வாட்டிகன் சோதித்தறிந்து, நடந்த இரண்டு அற்புதங்களைப் பற்றி ஒரு மருத்துவர் குழு ஆராய்ந்து உறுதி செய்து, அந்தச் செய்தி அனுப்பப்பட்டு இறுதியில் போப் முடிவெடுத்து அறிவிக்க வேண்டும்.
அப்படி நடந்த முதல் சம்பவம் கடந்த 1998ல், உடல்நலக் குறைவால் பாதிக்கப்பட்டிருந்த, மேற்குவங்கத்தைச் சேர்ந்த, பழங்குடிப் பெண் மோனிகாவை இறந்த பிறகும் அவரை நினைத்துப் பிரார்தனை செய்து பலன் பெறுவதை அல்லது குணமடைவதை அற்புதம் (Miracle) என்கிறது கத்தோலிக்கத் திருச்சபை. குணமடையச் செய்து அற்புதம் நிகழ்த்தினார்.
இரண்டாவதாக , 2008ல், 35 வயது பிரேசிலைச் சேர்ந்த மூளை மூளையில் உருவாகிய கட்டியால் கோமா நிலைக்குப் போன ஒரு நபருக்காக அவரது மனைவி தெரேசாவைப் பிரார்தனை செதுகொண்டதன் மூலம் அந்தக் கட்டு கரைந்து குணமடைந்து விட்ட, இரண்டாவது அற்புதத்தை நிகழ்த்தியதாகவும் கூறி, அவருக்குப் புனிதர் பட்டம் வழங்க, இப்போது போ பிரான்சிஸ் ஒப்புதல் தெரிவித்து உள்ளார்.
இதுவரை அன்னைத் தெரேசாவுக்குப் பெற்ற விருதுகள் .
1962 – பத்ம ஸ்ரீ விருது
1971 – 23வது போப் ஜான் அமைதி விருது
1971 – குட் சமரிட்டன் விருது
1971 – கென்னடி விருது
1972 – சர்வதேசப் புரிந்துணர்வுக்கான ஜவஹர்லால் நேரு விருது
1973 – டெம் பிள்டன் விருது
1977 – இங்கிலாந்தின் கேம்பிரிட்ஜ் பல்கலைக்கழகம் வழங்கிய டாக்டர் பட்டம்
1979 – அமைதிக்கான நோபல் பரிசு
1982 – பெல்ஜியம் நாட்டுப் பல்கலைக்கழகம் வழங்கிய டாக்டர் பட்டம்
1985 – சுதந்திரத்துக்கான பிரிசிடென்ஷியல் விருது
1996 – அமெரிக்காவின் கெளரவப் பிரஜை .
           ஆரம்ப காலங்களில் ஒரு முறை அன்னை தெரேசா அதிகாலையிலேயே எழுந்து குளித்து விட்டு, தெரு தெருவாகப் போய் யாசகம் கேட்டு தனது சேவை மையங்களுக்கு நிதி திரட்டுவது வழக்கம். ஒரு நாள், ஒரு கடைக்கு முன் சென்று நின்று யாசகம் கேட்டுக் கொண்டு இருந்தார். அந்தக் கடைக்காரர் வெற்றிலை பாக்கு போட்டுக் கொண்டு பார்த்தும் பார்க்காதது போல் இருந்தார். கடைக்காரரிடம் இருந்து எதையாவது வாங்கிட வேண்டும் என்று உறுதியுடன் தொடர்ந்து கேட்டுக் கொண்டே இருந்தார். கடைக்காரர் தெரேசாவை கோபமாக பார்த்து விட்டு ‘”தெரேசா நீட்டிய கையில் எச்சிலைத் துப்பினார்”. அப்போது சற்றும் மனம் தளராமல் “மிக்க நன்றி!!! நீங்கள் கொடுத்தது எனக்கு, என் விடுதியில் இருக்கும் அனாதை குழந்தைகளுக்கு ஏதாவது கொடுங்கள் என்று கேட்டார்” அந்தக் கடைக்காரர் “இப்படி ஒரு சகிப்புத்தன்மை உடைய பெண்ணை இப்பொழுதுதான் முதன் முறையாக பார்க்கிறேன்” என்று கூறி விட்டு நொடிப் பொழுதில் கல்லாப்பெட்டியில் இருந்த மொத்த பணத்தையும் எடுத்து அன்னை தெரேசா நீட்டிய இரு கைகளிலும் வைத்து விட்டார்.
                அன்னை தெரேசாவுக்கு அவர் வாழ்ந்த மதம் தரும் உயரிய அங்கீகாரம் அது மறுக்க முடியாத உண்மை. ஆனால் அன்பையும் கருணையையும் வாழும்போதே இறைவனனின் வரமாகப் பெற்று வாழ்ந்தவர் அன்னை தெரேசா . மனித குலம் அவரை மறக்கும் போது இந்த உலகின் கடைசி மனிதன் இறந்து விட்டான் என்பதை காலம் தன் பதிவேட்டில் குறித்துக்கொள்ளும்.
Posted in Uncategorized

”சமபாவம் என்பதே நின் இயல்பன்றோ?”

vn.jpeg

நர்தகிக்குத் தனது தாய் மூலம் அந்தச் செய்தியைக் கேட்டவுடன் மிகவும் சந்தோசமாக உணர்ந்தாள்.

தான் வாழ்நாளே இப்படி ஒரு வாய்ப்புக்காகத்தான் காத்து இருந்தது போல உற்சாகமானாள்.

தான் கற்றக் கலையின் தந்தை பரதமுனிக்கும் அதைக் கற்றுக்கொடுத்த குருவுக்கும் மனதார நன்றி சொல்லிக் கொண்டாள் .

அந்த  சமஸ்தான அரண்மனையில் அவள் நாட்டியம் நிகழ்ச்சி இது முதன் முறையல்ல .மாண்புமிகு மன்னர்  கையால் பல முறை தனிப்பட்ட முறையில் பாராட்டுப்பெற்று நர்தகிக் கௌரவப்படுத்தப்பட்டதைப் பல சமஸ்தானங்கள் அறியும்.ஆனால் நம் தாய் நாட்டின் கல்கத்தாவைச்சேர்ந்த ஒரு சிறந்த யோகியின் முன் நடனமாடும் பாக்கியமும் அவரின் கண்களின் மூலம் பெறவிருக்கும் ஆசிர்வாதமும் ,தன் வாழ் நாளில்கிடைத்தற்கு அரிய பாக்கியம் என நினைத்தாள்.

BharatanatyamDancer

நர்தகி நிருத்தம், நிருத்தியம், நாட்டியம் ஆகிய நடனத்தின் முப்பெரும் பிரிவுகளில் தேர்ச்சிப் பெற்றவள் கீதம், அபிநயம், பாவம் இவைகளைக்கொண்டுதாளக்கட்டு விடாமல் ஆட வேண்டியவை நிருத்தமாகும். நடனமாகிய நிருத்தமும் அபிநயக் கலையால் கருத்துக்களை வெளிப்படுத்தும்நாட்டியமும்கலந்துத் திகழும் கலை நிருத்தியம் எனப்படும். பாடலின் பொருளைக் கை முத்திரைகளினாலும் தாளத்தினைப் பாதங்களைத் தட்டிஆடுவதாலும்பாவத்தினை முகத்தினாலும் கண்களினாலும் வெளிக்கொண்டு வரல் நிருத்தியமாகும். ரஸ பாவங்களைக் கூட்டித் தாளக்கட்டுப்பாட்டுக்குள் அடக்கிக் கருத்தைப் புரிய வைப்பதே நிருத்தியமாகும்.இவற்றிலெல்லாம் அவள் கரைகண்டவள் .

அந்த ஒரு நாள் நாட்டியக் நிகழ்சிக்காக மிகக்கடினமான பரதநடனத்தின் பாவங்களையும் நவரஸங்களையும் பொருட்கள் மற்றும் செயற்பாடுகளையும் விளக்கும் அஸம்யுத ஆயத்தம் ஒற்றைக் கை முத்திரைகள் மற்றும் ஸம்யுத ஹஸ்த்தும் ,இரட்டைக் கை முத்திரைகள ஆகிய.சகல பயிற்சிகளையும் மேற்கொண்டாள் நர்த்தகி . அந்த நாட்டியத்திற்கு வேண்டிய பாடலைத்தேர்வு செய்யும்போது அப்போதைய வழக்கத்தில்முறைப்படுத்தப்பட்ட பரதத்தின்புஷ்பாஞ்சலி, பதம், வர்ணம் ஜாவளி, தில்லானா போன்ற சிருங்காரமே பிரதான ரஸமாகக் கொள்ளப்பட்டது. சிருங்காரரஸத்திலும் நாயக நாயகிப் பாவத்தில் இறைவனுக்குப் பதிலாக அன்றிலிருந்த மன்னர்களைப் பாட்டுடைத் தலைவனாகவும் பாடல்கள் புனைய பெற்றன.நடனங்கள் நிகழ்த்தப்பெற்றன.

large_120135805

ஆனால் நர்தகி பூர்வஜன்மத்தில் கம்சனின் அவையில் மந்திரியாக இருந்த கிருஷ்ணரின் பக்தர் அக்ரூரர் சத்தியபாமாவைஆறுதல் செயல்ஒன்று செய்யப்போய்க் கிருஷ்ணரால் பெற்ற சாபத்தில் அடுத்தப் பிறவியில் பூலோகத்தில் பார்வை இல்லாதவறாகப் பிறந்த சூர்தாசர் வல்லபாச்சாரியாரிடம் கற்றுக்கொண்ட “புஷ்டிமார்க்கம்’ அடிப்படையில் பாடியச் சூரசாகரம் பக்திக் கீர்த்தனைகளை நர்த்தகி மிகவும் விரும்புவாள். மேலும் சூர்தாசரைப்போலவே கிருஷ்ணனின் குழந்தைப் பருவத்தைப் போற்றி விரும்பி வருபவள் நர்தகி. அவளும் சூர்தாசரைப் போலவே கண்ணன் எப்போதும் வளர்ந்து பெரியவனாவதை விரும்பமாட்டாள்.மிகுந்த சேஷ்டைகள் செய்யும் பாலகிருஷ்ணன்தான் அவளுக்கும் பிடிக்கும் எனவே சூர்தாசரின் 25 ஆயிரம் பாடல்கள் ஓர்அற்புதமான பாடலைத் தேர்வு செய்தாள் .அதற்காகச் சமஸ்தானத்தின் சிறந்த நட்டுவாங்கம், வீணை, புல்லாங்குழல், வயலின், மிருதங்கம் ஆகியஇசைககலைஞர்களைத் தன்னுடன் இணைத்துக்கொண்டாள் 

நர்தகி அன்று மிகுந்த சந்தோசத்தில் அதிகாலை எழுந்தாள்.அவள் வசிக்கும் வீட்டின் மாடத்தில் இருந்து பார்த்தால் மாலை ஆடவிருக்கும் அரசவையின்ஆடலரங்கம் தெரியும் .அதை இங்கிருந்தே வணங்கிகொண்டாள் .

மாலை அரண்மனையின் ஒரு பகுதியில் மிகுந்த பரவசத்தில் இருந்த நர்தகிக்கு நாட்டியத்திற்காகப் பிரத்யோகமாகத் தைக்கப்பட்டவண்ணப்பட்டாடைகள் அணிவிக்கப்பட்டு நகைகளையும், காலில் சலங்கையும் அணிந்துகொண்டு தயாராக இருந்தாள்

அப்போது அரண்மனை நிகழ்சியை மேற்பார்வையிடும் ஒரு சேடி வந்தாள் , மன்னர் உன்னைத் தயாராக இருக்கச் சொன்னார்கள் .அந்தக்கல்கத்தாசுவாமிகள் விடைப் பெற்று அவர் ஓய்வறைக்குப் போன பிறகு நீ ஆடலரங்கம் வரலாம் என்று சொல்லி விட்டு அரண்மனைக்குள் போகத்திரும்பினாள் .

mysore-stage-i-187

நர்தகி மட்டுமல்ல அங்கிருந்த அவளுக்கு அலங்காரம் செய்தச் சேடிகளும் அவள் தாயாரும் அதிர்ந்துப் போனார்கள் .

நர்த்தகியின் தாய் அறிவிப்பைத் தந்த அந்தப் பெண்ணை நோக்கி ஏறக்குறைய ஓடிக் குறுக்கே சென்று தடுத்து , அம்மா  ஒரு நாழிகைப் பொறுங்கள்என்னசொன்னீர்கள் கல்கத்தா சுவாமிகள் ஓய்வரை போகிறாரா ? ஏன் அவர் நாட்டியம் பார்க்க அனுமதியில்லையா? என்றால் மூச்சிரைக்க

அதற்கு அந்தச் சேடிச் சொன்ன பதில் எல்லோரையும் மேலும் நிலைகுலைய வைத்தது விட்டது .

”தேவதாசியின் நட னத்தைக் கண்டு களிப்பது ஒரு துறவிக்கு அழகல்ல. அது தர்மத்த்திற்கு விரோதமானது” என்று அவர்மன்னரிடம்விடைபெற்றுக்கொண்டார் என்று இடியாய் ஒரு பதிலை இறக்கிவைத்து விட்டாள்

நர்தகி இது நாள் வரை ஒரு தேவதாசிக் குலத்தில் பிறந்தவள் என்பதற்காக வருந்தியதே இல்லை.மன்னனுக்குச் செய்யும் சேவைஇறைவனுக்குச்செய்யும் சேவையாகவே சந்தோசமாக நினைத்து இருந்தாள் ஆனால் இதைக் கேட்டவுடன்தான் தான் ஒரு தேவதாசியாகப்பிறந்ததற்காக வெட்க்கப் பட்டாள்.தன்னுடைய முகத்தை அங்கிருந்த நிலைக்கண்ணாடியில் பார்க்கும் போது அவளுக்கு அருவருப்பாகவும் இருந்தது .

அவள் கண்களிருந்துக் கண்ணிர் ஆறாய்ப் பெருகியது.

தாய் வந்து தேற்றினாள் .அவள் தோளில் சாய்ந்து வாய்விட்டு அழுதாள் நர்தகி

அவள் தாய் இந்த இப்படி ஒரு ஏமாற்றத்தில் தன் மகள் அழுது வருந்துவதைப் பார்த்ததே இல்லை .

நான் போக மாட்டேன் என்னால் ஆட முடியாது என்று அரற்றினாள்.

 ஏன் அம்மா என்னைப் பெற்றாய் என்று கதறினாள்?

விதி மகளே நாம் பெற்ற வரம் இது என்று சோல்லிக்கொண்டு தாயும் அழுதாள்.

கூடியிருந்த எல்லோரும் செய்வதறியாதுத் திகைத்தனர்.

நர்தகி ஆடலரங்கம் போகாவிட்டால்  அரசரின் கோபத்திற்கும் தண்டைனைக்கும் தப்ப முடியாது .

அங்கிருந்த பெண் ஒருத்தி இதை  நர்தகியின் தாயின் காதோரம் மெல்லச் சொன்னாள்.

சுதாரித்துக்கொண்ட நர்தகியின் தாயார்  , மகளைத் தேற்றத் தொடங்கினாள்

மகளின் முக ஒப்பனைகள் கண்ணீர் பெருக்கத்தால் கலைந்து கொண்டு இருந்தது.

நம் விதி இதுதான் மகளே ,கடவுள் மேல் பாரத்தைப்போட்டுப் போய் ஆடிவிட்டு வந்து விடு என்றாள் .

மன்னனின் கோபத்திற்கு ஆளானால் என்ன ஆகும் என்று என்பதை நர்தகியும் அறிவாள்.

தன்னால் மற்றவர்ளுக்கு துன்பம் வரக்கூடாது என்பதால் தனது முடிவை மாற்றிக்கொள்ளச் சம்மதித்தாள்

ஆனால் தான் ஏற்கனவே முடிவு செய்து அயராது பயிற்சி செய்த சூர்தாசரின் கீர்த்தனையை பாட விருப்பமில்லாமல் அவரின் வேறு ஒரு கீர்த்தனையை அப்போது தேர்வு செய்தாள் .

ஆடலரங்கம் போகும் முன்  மெல்லச் தனக்குள் சொல்லிக்கொள்வதும் முணுமுணுத்துக் கொள்வதும் ஆடல் மங்கைகளுக்கு வழக்கம்.

ஆனால் தன் மகள் சொல்லிக்கொண்டு இருக்கும் பாடல் வரிகளை உன்னிப்பாக கேட்கும் போது வேறு ஏதோ ஒரு பாடலை தேர்வு செய்து விட்டாள் என்பதை முடிவு செய்துவிட்டாள் என்பதை அவள் தாய் அறிந்தாள் .

இந்தத் திடீர் மாற்றம் முன்னைவிட அவள் தாயிற்குப் ஒரு வகையில் பயத்தைத் தரமால் இல்லை.ஆனால் நிகழ்சி நடக்க வேண்டும் ,தண்டனையிலிருந்து எல்லோரும் தப்பிக்க வேண்டும்  என்பது மட்டும் இப்போதைக்கு அவசியம் என்பதில் உறுதியாக இருந்தாள் .

சரச் சரவெனெப் பட்டுத்துணியின் ஒளியும்  கட்டியிருந்த சலங்கையும் அதிர ஆடலரங்கம் போகத் தயாரானாள் .

நர்தகியின் காற்சலங்கை அன்று மட்டும் அவளைவிடவும் அமைதியற்று இருந்தது

 இரண்டு தோழிகள் , ஒரு பட்டுத் துணியால்  நர்தகியைப் போர்த்தி   ஆடலரங்கம் அழைத்துச் சென்றனர் .

SDC11596

 

ஆடலரங்கம் ஏறும் முன் முதலில் மன்னரையும் அந்தச் சபையினரையும் வணங்கினாள் .மேடையையும் தொட்டு வணங்கினாள் 

அவள் கண்கள் அப்போது ஓர் இருக்கையைத் அந்த சபைக்குள் தேடியது .

ஆம் அது அந்த யோகி, இதுவரை அமர்ந்துச் இந்த சபையைச் சிறப்புச் செய்த இருக்கை அது .அதையும் வணங்கினாள் .

அடுத்தக் கணமே அவளையும் அறியாமல் கண்கள் குளமாயின.

மனதுக்குள் இறைவனையும் , குருவையும், சூர்தாசரை உதவுமாறு ஒரு சேர வேண்டிக்கொண்டாள்.தான் உணர்வு வயப்பட்டு, அந்த யோகியை  இந்த கீர்த்தனை மூலம் வருந்த வைக்காதிருக்க உதவிடுமாறும் மனம் உருக வேண்டிக்கொண்டாள்.  

எங்கிருந்து அப்படிப் பலம் தனக்குள் வந்தது என்று அவளுக்கே தெரியவில்லை ?

இயற்கை தான் கொடுக்க வேண்டிய செய்தியை யார் மூலமாவது எலோருக்கும் தந்து கொண்டே இருக்கும் அன்று அந்த யோகிக்கு நர்த்கி மூலம் அப்போது வெளிப்படத் தொடங்கியது

அந்த யோகியின் ஓய்வறை நோக்கித்திரும்பிய நர்தகி , நட்டுவாங்கம், வீணை, புல்லாங்குழல், வயலின், மிருதங்கம் எதோடும் கலக்காமல், தனது கணீர்க் குரலில் பாடத் தொடங்கினாள் …

 ‘பரமனே! சமபாவம் என்பதையே இயல்பாகக் கொண்ட நீ,

பாவம் செய்தவள் இவள் என்று என்னை ஒதுக்கிட நினைக்கலாமா?

இரும்புத் துண்டு ஒன்று, இறைவனின் பதுமையில் பஞ்ச உலோகங்களில் ஒன்றுமாக அமைகிறது.

பிறிதொரு இரும்புத் துண்டோ பிராணிகளைக் கொல்லும் பாவியின் கைவாளாகப் பாதகம் புரிகிறது.

ஆயினும், இரண்டும் ரஸவாதியின் திறனால் மாசற்றப் பொன்னாய் மாறுவதையும் நீ அறிவாய்!

பாவம் செய்தவள் இவள் என்று என்னை விலக்க நினைக்காதே!

சமபாவம் என்பதே நின் இயல்பன்றோ?

காளிந்தி நதியின் புனித நீரும், கழிகாலில் வழிகின்ற இழிநீரும் ஒரு நிலையில் இனிய கங்கையில் இணைகின்றபோது

ஏற்றம் பெறுவதை நீ ஏற்றுக்கொண்டவன் அன்றோ! பாவம் செய்தவள் இவள் என்று என்னை விலக்க நினைக்காதே!

பரமனே, சமபாவம் என்பதே நின் இயல்பன்றோ?’

 அவள் குரலின் உச்சமும் வார்த்தைகளும் அந்த சபை தாண்டி ,கம்பீரமான அந்த யோகியின் என்று மூடிய ஓய்வறைக்குள் கதிரவனின் கதிர்களைப்போல சீறிப்பாய்ந்தது.

அது பாடலா ஒரு பெண்ணின் கதறலா என்பதை அங்கிருப்பவர் அறிந்து கொள்ளும் முன்   மேடயில்  மயங்கிச் சரிந்தாள்  நர்தகி. அவையினரும் ஒரு கணம் ஸ்தம்பித்து விட்டனர்.

 ஏற்கனவே நர்தகியின் அடிபட்ட மானின் கதறலாய்  பாடிய கீர்த்தனைகளின் பாதிப்பிலிருந்து மன்னரும் ஏனைய சபையினரும் விலகும் முன்,

யாரும் எதிர்பாராவிதமாக அந்த சபைக்குள் வேறு அதிர்ச்சி சம்பவம் நடந்தது

 

ProGOtiation_IMAGE1

ஓய்வறையிலிருந்து நர்தகியின் பாடல் வரிகளால் தைக்கப்பட்ட யோகி ,  நேரே சபைக்கே வந்து விட்டார்.

வந்தவர்,  யாரையும் பார்க்கவில்லை. நேராக நாட்டியம் நடைபெற்ற  ஆடலரங்க மேடைக்கு அருகே விரைந்து சென்றார்.

அங்கு ஆடலரங்கத்தில் கண்ணீர் மல்க சரிந்த நர்தகியை நோக்கி தோழிகள்  மேடைக்கு ஓடிக்கொண்டு இருந்தனர்

இயல்பிலேயே ஒளிவீசும் அந்த யோகியின்  கண்கள் கண்ணீரால் பளப் பளத்தது, அங்கு பாடிய நர்தகியை அணங்கை அன்னையைக் காண்பதுபோல் அன்புடன் நோக்கி,

”தாயே!நான்குற்றவாளி ஆகிவிட்டேன். இங்கு வராமலே இருந்து, உன்னை அவமதித்த பாவத்துக்கு ஆளாகி இருப்பேன். ஆயினும் தாயே… அதிர்ஷ்டவசமாகஉன் சங்கீதம் என் அறிவை விழிப்புறச் செய்துவிட்டது!” உலகில் யாரும் உயர்வும் இல்லை. தாழ்வும் இல்லை?” என்று கண்ணீர் மல்கக் கூறினார்.

மொத்த சபையும் எழுந்து நின்று அந்த வீரத்துறவியின் செய்கையால் கைகூப்பி வணங்கியது.

இயற்கை அன்று அந்த யோகிக்கு, நர்தகி மூலம் ஓர் அறச்செய்தியை வழங்கியது அன்று !

bharatanatyam_mudra_by_madzindia

இதை உருவாக்கியவனின் உள்ளச்சுமை :

நாம் எல்லோரும் அறிந்த  யாரலும் மறக்க முடியாத ஒரு வீரத்துறவிக்கு நிகழ்ந்த உண்மைச் சம்பவம் இது .ஆனால் ஒரு வரியில் சொன்னால் ஒரு நாட்டிய நங்கையிடமிருந்து  வீரத்துறவிக்கு இயற்கை ஒரு செய்தியை சொல்லிய நிகழ்ச்சி அவ்வளவுதான் .ஆனால் வெகு நாளாய் பெயர் கூட அறியாத ( நர்தகி உண்மை பெயர் இல்லை) அந்த நாட்டிய   மங்கையின் மனதின் உணர்வுகளை மொழி பெயர்க்க ஆசைப்பட்டேன் .அவள் பிறப்பால் எல்லோரும் சமம் என்ற சூர்தாசர் கீர்த்தனை மூலம் என் மனதில் வெகு நாள்  தங்கியிருந்தது.அவளே இதை எழுதுமாறு தூண்டியது போல இருந்தது.( ஒரு வேளை அவளே நானாக பிறந்தேனோ என்ற அதீத கற்பனையா ? தெரியவில்லை. )  அந்தப் பெண் பற்றியப் புனைவால்  அந்த வீரத்துறவிக்கும் அவர் இந்த மாபெரும் இந்திய சமூகதிற்கு செய்த உழைப்புக்கும் எந்த ஒரு பங்கமும் வரக்கூடாது என்பதில் நான் மிக கவனமாக இருந்திருக்கிறேன் .அதை மீறி யாருடைய மனதிலும் இந்த பதிவு நெல்முனையளவும் தவறு என்று நினைத்தால்  உடனே இங்கிருந்து நீக்க சித்தமாக இருக்கிறேன் .)

Posted in Uncategorized

பாவம் பசங்க !

 

சில வாரங்களாக நான்காம் வகுப்புப் படிக்கும் எனது பையன் பள்ளியிலிருந்து மாலையில் நான் அழைத்து வரும்போது மிகவும் சோர்வாகவோ அல்லது ஒரு வெறுமையுடன் இருப்பதைக் கவனித்தேன். .பள்ளியிலிருந்து வந்த சில மணி நேரங்கள் யார் கூடயேயும் கொடுக்காமல் யார் பேச்சும் கேட்காமல் எதையாவது செய்து கொண்டு இருப்பான்.அப்புறம் சில மணி நேரங்களில் சரியாகி விடுவான் இது நாளடைவில் அதிகம் ஆனது , 

அவன் அமைதியற்ற நடவடிக்கைச் சில சமயத்தில் எங்களுக்கு எரிச்சல் ஊட்டியது .ஏதோ ஒரு மன அழுத்தம் இருக்கும் பெரிய மனிதர்களைப் போல இருந்தது அவன் நடவடிக்கை. 
            
     வீட்டில் ஒருவேளை அவனுக்குச் சில மணிநேர யாருமில்லாமல் தனியாக இருப்பதோ வேறு எதாவது சூழ்நிலையைக் காரணமாக இருக்குமோ என்ற சந்தேகம் வந்ததால் அருகில் உள்ள ஒரு ஆசிரியையிடம் டியுசன் அனுப்பினோம் அங்கு இவன் வீட்டுப் பாடங்களை மட்டுமே செய்வான் .இதிலும் பெரிய மாற்றமில்லை. இப்போது அவனோடு இருக்கும் நேரத்தை அதிகப்படுத்திக் கவனிக்கத்தொடங்கிய போது எவ்விதக் காரணமும் இல்லாமல் கண்களை அதிகம் முறை மூடி முடித்திறப்பது போலச் செய்யத் தொடங்கினான் .இன்னும் கொஞ்சம் சந்தேகம் வலுக்கத்தொடங்கியது .’மேனிக் டிப்ரசன்’ மாதிரி இருக்குமோ ? என்ற சந்தேகம் வரவே அருகில் உள்ள குழந்தை மருத்துவரிடம் சென்ற போது அவர் ஒருவேளை நரம்புத் தளர்ச்சியாக இருக்கலாம் என்று ஒருமாதம் மாத்திரைகள் கொடுத்தார் .அப்படியும் பெரிய முன்னேற்றமும் இல்லை. 
 
கடந்த வாரம் ஒரு நாள் என்னிடம் அவன் வகுப்பு ஆசிரியை அவனிடம் கடுமையாக நடந்து கொள்வதாகவும் ,அவனைக் கண்டால் பிடிக்கவில்லை என்று சொல்வதாகச் சொன்னான் .அவன் அம்மாவிடம் இது மாதிரிச் சொன்னதாகச் சொன்னேன் . ஆமாம் நான் ஒருமுறை சொன்ன போது என்ன என்னுடைய ”மிஸ்” மாதிரியே நீயும் என்னப்பார்த்தாலே பிடிக்கவில்லை என்று என்னிடம் கூடச் சொன்னான் என்றார் மனைவி . 
 
எனக்குப் பொறித் தட்டியது. அவன் அந்தப் பள்ளியில் அவன் எல்கேஜி முதல் படித்துக்கொண்டு இருக்கிறான். சரி எந்த ஒரு ஆசிரியைப்பற்றியும் இப்படிச் சொன்னதேயில்லை . நேரில் சென்று அவனுடைய வகுப்பு ஆசிரியைப் பார்க்க முடிவு செய்த போது மனைவி தடுத்தார்.அப்புறம் வேண்டுமென்றே அவனுக்குத் தொந்தரவு கொடுத்தால் அவன் என்ன செய்வான் ? என்ற பெற்றோர்களுக்கே உரிய வழக்கமான பயத்துடன் கேட்டார்.அதற்கேற்றார் போலப் பையனும் வேண்டாம்ப்பா என்றான் பரிதாபமாக ! . 
 
ஆனால்
 அடுத்தடுத்து அங்கு நடந்த இரு நிகழ்ச்சிகள் என்னை நிர்வாகத்தின் வாசலை கொஞ்சம் வேகமாகச் சென்று மிதிக்க வைத்தது விட்டது ! 
 
இந்த வாரம் அவன் செய்து கொண்டு சென்ற ”ப்ராஜெக்ட்”கசக்கிக் குப்பையில் வீசப்பட்டது .அடுத்து இன்று மாலை ஒரு வகுப்பு நேரம் முழுவதும் வெளியில் நிறுத்தப்பட்டு இருக்கிறான் .
அடுத்த வகுப்பான ’ஸ்கேட்டிங்’ போக முடியாத அளவுக்கு அது அவனைப் பாதித்து இருகிறது . 
 
அவனிடமே கேட்டேன் அப்பா பள்ளிக்கு சென்று சண்டைப் போடமாட்டேன் என்ன காரணம் என்று விசாரிக்கிறேன் என்றேன் .அரை மனதாக ஒத்துக்கொண்டான். ஆனால் அன்றுதான் போகிறோம் என்று அவனிடம் சொல்லாமல், மனைவியைப் பணிபுரியும் அலுவலகத்திலிருந்து கூட்டிக்கொண்டு பள்ளிக்குப் போனேன் . 
போகும் போது மனைவியும் தயக்கத்துடன் என்ன பேசப் போகிறீர்கள் ? என்றார் . 
 
யார் மீது தவறு இருக்கிறது என்பதைச் சரி செய்யவே போகிறோம் அங்குப் போய் அவர்கள் பேசுவதைப் பார்த்து முடிவெடுத்துக்கொள்ளலாம் என்றேன் . 
பள்ளியின் முதல்வரை காத்து இருக்க வைத்து அனுமதித்தார்கள் அந்தப் பள்ளி நிர்வாகம் ஒரு ஆன்மீக அறக்கட்டளைக்குக் கீழ் செயல்படுகிறது. 
 
எங்களை விசாரித்த பள்ளியின் பெண் முதல்வர் முதலில் கேட்ட கேள்வி , 
என்ன நடந்தது? 
நான் பேசினேன் , 
எனக்கு உங்கள் பள்ளி நிர்வாகத்தின் மேல் எனக்குப் பிரச்சனை இல்லை .நான் இப்போது இங்கு வந்தது உங்கள் ஆசிரியர் யார் மீது புகார் கொடுப்பதிற்கில்லை.இந்த வகுப்பில் படிக்கும் எங்கள் பையன் சமீபத்தில் சில நாட்களாக வரும் அவனது நடவடிக்கையும் கடந்த சில நாளுக்கும் முன் உச்சகட்டமாக அவன் செய்தித் தாள் மூலம் செய்த “ப்ராஜக்டை”கசங்கி குப்பையில் வீசியதையும்,நேற்றுப் பக்கத்திலிருக்கும் பையனோடு பேசியதால் அந்த வகுப்பு முழுதும் வகுப்புக்கு வெளியே நிறுத்தித் தண்டித்ததையும் சொன்னேன் .குறிப்பாக அவன் வகுப்பு ஆசிரியை அவன் மீது ஏதோ கோபமாக இருப்பதை அறிந்துக் கொள்ளாவே நாங்கள் வந்து இருபதாக அழுத்திச் சொன்னேன் . 
அவர் ஆச்சர்யபட்டார் .இப்படி எங்கள் பள்ளியிலா ? என்னால் நம்பமுடியவில்லை .அது மட்டுமல்ல அப்படி நடந்து இருந்தால் அது தவறு தவறுதான் .குழந்தைகளைக் கண்டிக்கச் சொல்கிறோம் தண்டனைக் கொடுப்பதில் எனக்கும் உடன்பாடில்லை என்றார் . 
மேலும் பேசிய அவர் , 
 
இது 1044 பெண்களும் ஆண்களும் இணைந்துக் கல்விப் பயிலும் இடம் .அதனால் ஒவ்வொரு நாளும் எல்லாக் குழந்தைகளும் பள்ளியிலிருந்து அனுப்பி வைத்த பின்தான் நிம்மதி அடைகிறோம் .அந்த அளவுக்கு இந்த வருடம் எங்கள் பணியில் நாங்கள் சந்திக்கும் சவால்கள் முன் எப்போதும் இல்லாத அளவுக்கு அதிகரித்து இருக்கிறது என்றார் 
அதற்கு அவர் எனக்கு என் பிரச்சனையை விடப் பெரிதாய்த் தெரிந்தது .ஒரு பாலசந்தர்ப் படத்தில் சொன்ன மாதிரி ஒரு பெரிய கோட்டை அழிக்க அதற்குப் பக்கதில் அதைப் பெரிய கோடு போட்டு சின்னதாக்குவது போல இருந்தது! 
போன வாரம் என்னுடைய டேபிள் உயரம் கூட வளராத யுகேஜிப் பையன் அவன் வகுப்புப் பிள்ளையைக் காதல் பண்ணுவதாகச் சொன்னதாக ஒரு புகார் வந்தது,நான் அதிர்ந்து போய்விட்டேன் . கூப்பிட்டு எப்படி அவன் காதலைப் என்ன புரிந்து வைத்து இருக்கிறான். என்று விசாரித்து நீ காதல் பண்ண வேண்டியது உன் அம்மா அப்பா நண்பன் எல்லோரயும்தான் என்று சொல்லி அனுப்பினேன் .வேறு என்ன சொல்ல ? என்றார்ச் சிரித்துக்கொண்டே . 
இப்படி அது, இது, எது ? என்பது போலப் பல பிரச்சனையைப் பேசி விட்டுக் கடைசியில் உங்கள் பையன் பிரச்சனையை நான் உடனே கவனிக்கிறேன் .நீங்கள் கவலைப்படாமல் உங்கள் வீட்டுக்குப் போங்கள் என்றார் . 
விடைபெற்றோம் . 
 
மனைவிக்குச் சமாதானம் ஆகவில்லை என்பதை முகம் சொல்லியது . 
இன்னும் நான் அவர்களை அக்னிப் பரீட்சையில் நாஞ்சில் சம்பத்தைக் கேட்டது போலக் கேட்டு இருக்கலாம் என்று நினைத்தாரோ என்னவோ ? 
 
 
அடுத்தச் சில நாளில் எனக்குச் சில வேலைகள் இருந்ததால் பையனை அழைக்க அவன் அம்மா போயிருக்கிறார் . 
அந்த வகுப்பு ஆசிரியைத் தானே என் மனைவியை காத்து இருந்து சந்தித்து ,
நான் இங்குப் பத்து ஆண்களாகப் பணிபுரிந்து கொண்டு இருக்கிறேன் .இப்படி யாரும் என்னைப்பற்றி நேரடியாக நிர்வாகத்தில் சொன்னதே இல்லை .நீங்கள் என்னிடம் கேட்டு இருக்கலாம் என்று ஆதங்கப்பட்டாராம் . 
என மனைவிக்குச் சின்னச் சந்தோசம். 
வெளியே காட்டிக்கொள்ளாமல் பேசி விட்டு வந்து விட்டார்
 
 பெற்றவர்களுக்குப் பாசம் !
ஆசிரியைக்குக்கு கௌரவப் பிரச்சனை !
 
பள்ளி நிர்வாகத்திற்கோ பள்ளியின் பெயர் மேல் அக்கறை !
மூவருக்கும் மத்தியில் மாட்டிக்கொண்டு ,பசங்க படும்பாடுதான் பாவம் !! 
Posted in Uncategorized

ஆன்ம சாந்தி தவம்.

bird_escaping_from_cage

என் அம்மா இறந்த பிறகு திருப்பூர் ஒன்பதாவது நாள் நான் திரும்பியவுடன் திண்டுக்கல்லில் நடந்த இறுதிச் சடங்கில் கலந்து கொள்ள முடியாத பலரும் வீட்டுக்குத் துக்கம் விசாரிக்க வந்தனர் .அப்படி வந்தவர்களில் நான் இணைந்து இருக்கும் மன வளக்கலை அமைப்பிலிருந்து பலர் வந்தனர் எல்லோரும் எங்கள் வீட்டுக்குத் திட்டமிட்டு அங்கிருந்துக் கிளம்புபோது எதேச்சையாக அங்கு வந்தவரில் நானும் வருகிறேன் என்று ஒருவர் அவர்களுடன் வந்தார்,அவர் பெயர்த் திரு.சந்திரகுமார் .சில வருடமாகத் திறப்புவிழாவுக்காகக் காத்து இருக்கும் அறிவுத்திருகோவிலின் அறங்காவளர்களில் ஒருவர் அவர்.வந்தவர்கள் எல்லோரும் விசாரித்து விட்டு விடைபெறும் போது அவர் மட்டும் பேசினார், நீங்கள் வருத்தப்படாதீர்கள் தம்பி, உங்கள் தாய் இறையருளுடன் சாந்தி அடைவார்.எனக்கு உங்களை அறிமுகமில்லை இருந்தாலும் இங்குவரத்தூண்டியது அந்த இறையருள் சித்தம் .நம்மையெல்லாம் ஒன்று சேர்த்த மஹரிசி சித்தம் என்றார் . எனக்கு அது ஆறுதலாக இருந்தது.

நேற்று இரவு அவர் மிகவும் உடல் நலம் குன்றி இருப்பதாகக் குறுஞ்செய்தி வந்தது.காலையில் ஐந்து மணிக்கு மன்றத்திற்குள் நுழைந்தவுடன் இன்று திரு.சந்திரகுமார் அவர்கள் இறைவனடிச் சேர்ந்து விட்டார் எனும் துயரமான செய்தியைச் சொன்னார்கள்

img_54417427dc5b5

எல்லோரும் சுமார் 8 மணிக்கு அவர் இல்லம் போனோம்.காலை 8.30 க்கெல்லாம் மின் மயானம் கொண்டு செல்ல இருப்பதாகக் கேள்விப்பட்டோம் .நாங்கள் அவர்கள் வீடு நெருங்கும் போதுதான் இறுதிச் சடங்கில் கலந்து கொள்ள எல்லோரும் வரத் தொடங்கியிருந்தனர் .வண்டியில் வருபவர்கள் உட்கார தேவையான இருக்கைகள் போடப்பட்டுக்கொண்டு இருந்தது .மிக அழுத்தமான சூழல் அங்கு நிலவிக்கொண்டு இருந்தது.வீட்டுக்குள் நுழைய, நுழையப் பெண்களின் அழுகைச் சத்தம் கதறலாய் வெளிப்பட்டு அந்த இல்லத்தைச்சுற்றி மிகப்பெரிய துக்க அலையின் அதிர்வை ஏற்படுத்திக்கொண்டு இருந்தது .வீட்டின் முன்னறையில் திரு .சந்திரகுமார் அவர்களின் உயிர் பிரிந்த பௌதீக உடல் கண்ணாடிப் பெட்டிக்குள் சலனமற்ற நிலையில் கிடத்தப்பட்டு இருந்தது.அறைமுழுதும் மனிதமுகங்கள் அழுத்தமான மன நிலையோடு தேங்கியிருந்தனர்.

l_univers_2242

            நாங்கள் அவர் உடலைச் சுற்றி நின்றோம்.அந்தக் கனத்த மவுனத்திற்கும் கதறலுக்கும் இடையே அவருக்கு ஆன்ம சாந்தி தவத்தைச் செய்து பிரிந்து நிற்கும் அண்ணாரது கர்மப்பதிவுகள் அல்லது கடமைகள் இருக்குமேயானால் அதை அவர் கருவழியான வாரிசுகள் அல்லது எண்ணத்தால் அவரோடு ஒத்த எவரின் உடலிலாவது தங்கி நிறைவேற்றிக்கொள்ள முயல்வார்.ஆனால் அது சில கால விரயத்திற்குப் பிறகு நடக்கலாம் ! அவரது ஆன்மாவின் பணியையும் கடமையும் நிறவேற்றும் பொருட்டு, மஹரிசி வழங்கிய ஜீவன்முக்தராக்குவதற்காக துரியாதீதத் தவத்தைக்கொண்டு இந்த ஆன்ம சாந்தி தவத்தினைச் செய்து இங்குத் தவமியற்றுபவர்கள் தவத்தின் மூலம் அண்ணாரது ஆன்மாவைப் பங்கீடு செய்து இசைந்து ஏற்றுக்கொண்டு அவரது ஆன்மாவை அமைதிப்படுத்த இருக்கிறோம்.அது மட்டுமல்ல அவரை இழந்துத் தவிக்கு அவரின் குடும்ப உறுபினர்களுக்கு ஆறுதல் அளிக்கும் விதமாக வாழ்வின் நிலையாமை பற்றிய உண்மைகளை எடுத்துச்சொல்லி அவர்களை ஏற்றுக்கொள்ளச் செய்வதற்கு இதன் மூலம் முயல்கிறோம்

எங்கள் அன்பர்களில் மூத்தவர் ஒருவர் அங்குக் கூடியிருந்த அனைவரிடமும் அண்ணார் திரு,சந்திரகுமார் அவர்கள் ஆத்மா சாந்தி அடையவும் அவரின் குடும்பத்தினர் அனைவருக்கும் அண்ணார் இனி வரும் அனைத்து நிகழ்வுகளுக்கும் உறுதுணையாக இருக்க ஆன்ம சாந்தி தவம் நடத்த அனுமதியும் ஒத்துழைப்பும் தாருங்கள் என்று கேட்டுக்கொண்டார்.அமைதியாக நாங்கள் இயற்ற இருக்கும் தவத்தைப்பற்றி சொல்லி தவம்மியற்ற உதவுமாறு எங்கள் சார்பில் வேண்டுதலை வைத்தார்.

தவம் செய்பவர்கள் அண்ணாரின் உடலைச்சுற்றி அமர்ந்துகொண்டோம்.இந்த தவம் இயற்றக் குறைந்தது ஆறு தவயோகிகள் இருப்பது அவசியம் அதற்கு மேல் எத்தனைபேர் வேண்டுமானாலும் இருக்கலாம். உடல் இருக்கும்போதோ அல்லது மறைந்த 7 நாளுக்குள் செய்வது நல்லது .
அங்கு இருந்த பலருக்கும் ஆன்ம சாந்தி தவம் என்றால் என்ன என்று புரிந்துக் கொண்டவர்கள் குறைந்த நபர்களாக இருந்தாலும் அவர்கள் அமைதியாக ஒதுங்கி ஒத்துழைப்புத்தந்தனர்.

மூத்த அன்பர் தவத்தை இயற்றத் தொடங்கினார்…
இறை வணக்கம் குரு வணக்கம் பாடப்பட்டது.
(காலம் கருதி அங்கு சில விசயங்கள் சுருக்கமாக நடைபெற்றது.முக்கியமாக அண்ணாரது உருவப்படம் அங்குத் தவமியற்றுபவர்கள் பார்வையில் படுமாறு வைக்கப்பட்டு,பிறப்பிற்கு முன்,வாழும் காலத்தில் ,இறப்பிற்குப் பின் உயிரின் நிலைப்பற்றி 45 நிமிடங்கள் பேசவேண்டியதும் அதோடு அண்ணாரது குணநலன் பற்றியும் அவர் இறப்பு நிகழ்ந்த விதம் பற்றியும் அவருக்கு நெருக்கமானவர்கள் சிலர் எடுத்துக்கூற அனுமதிக்க வேண்டும் என்பது அதில் ஒரு முக்கிய அம்சம் .ஆனால் அங்கிருக்கும் அவர் உடல் இன்னும் குறிகியக் நேரத்திற்குள் மின்மயானம் கொண்டு செல்ல அனுமதிக்கப்பட்டு இருக்கிறது என்பதால் ஒன்றினால் ஒன்று கெடக்கூடாது என்ற குருவின் அறவழி அங்குப் பின்பற்றப்பட்டது .)

images

குருவை வணங்கி அவரின் துணையோடு அரம்பிக்கப்பட்டது.

தவமியற்றுபவர் முதலில் தனக்கு அருட்காப்புச் செய்துகொண்டு எங்களனைவருக்கும் மூன்றுமுறை அருட்காப்பிட்டார்
இடத்தூய்மை,அருளலை பாய்ச்சுதல்,அன்னை தந்தை செய்து கொண்டோம்.
ஆக்கினை மூன்று நிமிடமும்
துரியம் ஐந்து நிமிடமும்
அண்ணாரின் முழு உருவத்தையும் மனதில் இணைத்துக்கொண்டு மெதுவாக உயர்ந்து துவாத சாங்கத்தில் ஒருநிமிடமும்,
அதற்குமேல் உயர்ந்துச் சந்திரனில் அரை நிமிடமும்
மேலும் உயர்ந்துச் சூரியனில் அரை நிமிடமும்
அப்படியே சூரியனை மையமாக வைத்து சுற்றி எல்லாப்புறங்களிலும் மனதால் விரிந்துப் பரவி அண்ணாரது உருவ நினவு அலைகளை இந்தப் பிரபஞ்சம் முழுவதுமாக் பஞ்சுபொதியைப் பிரித்துப் பரவ விடுவதுபோலப் பரவ விட்டு
சக்திக் களத்தில் ஐந்து நிமிடமும்
இறந்த அண்ணாரது நினைவலைகளைப் பிரபஞ்சத்தில் விட்டுவிட்டு, நம்மைத் தூய்மை செய்வதற்காகப் பிரபஞ்சதிற்கு அப்பால் மேலும் மனம் விரிந்து சுத்த வெளியில் ஐந்து நிமிடம்,

வாழ்க வளமுடன் என வாழ்த்தித் தவத்தை நிறைவு செய்ய மனதால் சுருங்கிப் பிரபஞ்சத்திற்கு வந்து அரை நிமிடமும்
மேலும் இறங்கிச் சூரியனில் 15 வினாடியும்
அதிலும் சுருங்கிச் சந்திரனில் 15 வினாடியும்
மேலும் இறங்கித் துவாத சாங்கத்தில் 30 வினாடியும்
துரியத்தில் 30 வினாடியும் நின்று ,சந்திர குமார் அவர்கள் ஆன்மா சாந்தி அடைவதாக ,அமைதி பெறுவதாக,கூறித் தவத்தை நிறவு செய்தோம்.
மீண்டும் ஒரு முறை அண்ணார் உடலுக்கு வணக்கம் தெரிவித்து விட்டு மேலே நடக்கவிருக்கும் இறுதிச் சடங்கை நிறைவேற்ற ஒதுங்கி நின்று ஒத்துழைத்தோம்..

Posted in Uncategorized

அம்மாவின் இறுதிப் பயணம் .

முன் குறிப்பு . எங்கள் அம்மாவின் இறுதி நாள்  அன்று நிகழ்ந்த மறக்க முடியாத சில விசயங்களைப் பதிவு செய்து இருக்கிறேன். நேற்று 25.06.2015 அம்மாவின் நினைவு நாள் . இணையப் பக்கம் வாசிப்பவர்கள் சோகங்களைத் தாங்கிவரும் பதிவுகளைப் பிடிக்காதவர்கள் உண்டு .அவர்களிடம் முதன் முறையாக இந்தப் பதிவிடல் மூலம் மன்னிப்புக் கேட்டுக் கொள்கிறேன் .

அப்போதெல்லாம் எனக்கு அலைபேசி அழைப்பு இரவு பத்து மணிக்கு மேல் வந்தால் ஒரு விதப் பயத்துடன் எடுக்கும் பழக்கம் தொற்றிக் கொண்டு இருந்தது .தந்தைக்கு மாரடைப்பு வந்த பிறகு ஆஞ்சியோ கிராம் செய்து பார்த்ததில் நான்கு இடத்தில் அடைப்பு அதில் இரண்டு 90 சதவிதத்திற்கு மேல் இருந்ததும் , வேறு சில உடல் காரணங்களால் உடனே அறுவைச் சிகிச்சைச் செய்ய முடியாத நேரம் அது.அவரைத் தொடர்ந்து அம்மாவிற்கு உள்மூலம் சம்பந்தமாகத் தொடர் ரத்த இழப்பு உடல் பலவீனம் . இருவரும் பல வீனமான நிலையில் இருந்தார்கள் உணவும் மருந்தும் சொந்த அண்ணி அரசு மருத்துவமனையில் நர்ஸாகப் பணிபுரிவதால் அவர்கள் மேற்பார்வையில் இருந்தது .

கடந்த ஆண்டு 25 ஜூன் அதிகாலை 4 மணிச் சுமாருக்கு அண்ணனிடமிருந்து ஃபோன் வந்தது . பதறித்தான் எடுத்தேன் . அம்மாவுக்கு மூச்சுத் திணறல் அதிகமிருப்பதால் ஐசியுவில் வைத்து இருக்கிறார்காள் .கூடவே தங்கி இருப்பதற்கேற்ப உன் மனைவியையும் அழைத்து வந்து விடு என்றார் . ஃபோனை வைத்து விட்டேன் ஆனால் ஏதோ ஒரு வெற்றிடம் மனதில் நிரம்ப, மீண்டும் அவரை ஃபோனில் கூப்பிட்டு எப்படி இருக்கிறார்கள் என்றேன் .அவர் ஏதோ சொன்னார் .ஆனால் எனக்குக் கேட்டது அல்லது புரிந்து கொண்டது ஒன்றே ஒன்றுதான்.கிளம்பிவா என்பதுதான் அது .

           திண்டுக்கல்லில், நேரே ஜி.ஹெச்சுக்கே போய் விட்டோம் .என் வாழ்வில் அப்படி ஒரு நிலையில் அம்மாவைப் பார்ப்பது முதன் முறை எனக்கு .

உடல் நிலை முடியாத நிலையில் கூட எங்கள் ஐவருக்கும் உணவுச் சமைத்து விட்டுத்தான் ஒய்வெடுப்பது அம்மாவின் வழக்கம் .சொந்த ஊரில் விசேசம் என்றாலும் அன்று முழுவதற்குமான உணவு இருக்கும் .அதிகபட்சம் போன ஒரே நாளில் திரும்பி விடுவது அவர்கள் வாடிக்கை.அப்படிப் பட்ட அம்மாவை ஒருபக்கம் மூச்சுத்திறணலுக்கான ஆக்சிஜன் டுயூப் ,மறு புறம் இதயதுடிப்புக் கண்காணிப்புக் கருவிகள் ,குளுக்கோஸ் ஏற்றும் டுயூப் என்ற பல இணைப்புகளின் நடுவில் போராடிக் கொண்டு இருந்தும் உட்கார் என்று நிலைக்க முடியாத கண்களுடன் தான் படுத்து இருந்த பெட்டைக் காட்டினார்கள்.அது புரியவில்லை என்பதால் சிரமப்பட்டுச் சைகை செய்தார்கள் .எனக்கு என் பையனை அருகே அனுப்பச் சைகை செய்தார்கள் .அனுப்பினேன் .அவன் கைப் பற்றும் போது கண்ணீர் வழிந்தது. எனக்கு அங்கு இருக்கவும் முடியவில்லை இடத்தை விட்டு நீங்கவும் மனமில்லை.என் வெறித்த பார்வை என்னை மெல்லப் பலவீனப்படுத்தத் தொடங்கியது .கால்கள் நடுங்கியது .

பெரிய டாக்டர் வர்றாங்கக் கூட்டம் போடாதீங்க ,கவிதா சிஸ்டர் சொந்தமெல்லாம் கொஞ்சம் வெளியே நில்லுங்க அப்புறம் எங்கள டாக்டர் திட்டுவாங்க .
அங்கு உள்ளே பணிபுரியும் ஹெல்ப்பர்ஸ் சத்தம் போட ,அண்ணன் மகளை மட்டும் அம்மா அருகில் விட்டு விட்டு வெளியே வந்தோம் .

மனைவியை அழைத்துக் கொண்டு எதிரே உள்ள ஹோட்டலில் உணவுச் சாப்பிட வைத்து விட்டு என் பையனுடன் திருப்பூர்த் திரும்பலாம் என மருத்துவமனைக்குக் கீழ் தளம் வந்தேன் .அதற்குச் சில வாரங்களுக்கு முன் இதே ஒரு வாரம் இரத்தக் குறைவு காரணமாக ஜி.ஹெச்சில் அம்மாவைச் சேர்த்து இருந்தபோது மனைவி ஒருவாரம் உடன் இருந்து திரும்பி இருந்ததால் அவர்களுக்குப் பழக்கம் ஜி.ஹெச் .அரைகுறை மனதுடன் உணவு சாப்பிட்டோம் .மீண்டும் மேலே வந்தோம் .ஜன்னல் வழியாகப் பார்த்தால் ஒருக்களித்த நிலையில் முகம் திரும்பி, படுத்து இருந்தார்கள் .உடன் இருந்த அண்ணண் பெண்ணைக் கேட்டோம் .டாக்டர் வந்தார் ஏதோ ஓர் இன்ஞ்செக்சன் குளுக்கோசுடன் போட்டார்ப் போடுவதற்கு முன் ( சித்தியை ) நர்ஸ் அண்ணியிடம் ஃபோன் பண்ணிப் பேசினார் இப்பப் பத்து நிமிசமாத்தான் தூங்கறாங்க என்றாள். .பார்க்கும் நேரம் முடிந்த நிலையில் , உடன் இருப்பவரைத் தவிர மற்ற எல்லோரையும் வெளியே போக அறிவுறுத்தினார்கள் .நான் ஊருக்குத் திரும்புவதால் ஒருமுறை மீண்டும் அம்மாவைப் பார்த்து விட்டுப் போகலாம் என்று உள்ளே அம்மா பெட் அருகே போனேன் .அங்கு ஏதோ ஓர் அமானுஸ்யம் கலந்த ஒரு வெறுமை இருந்தது .இதயத் துடிப்பு மானிட்டரை எதேச்சையாய்ப் பார்த்தேன் .அதில் வெறும் நேரான கோடு போய்க் கொண்டு இருந்தது.அங்கு அதற்கு அடுத்த அறையில் இருந்த நர்ஸ் கூப்பிட அண்ணன் பெண்ணிடம் சொல்லி அழைத்தேன் .வந்த நர்ஸ் மானிட்டரைக் காட்டியவுடன் பதஷ்டமானாள் .வெளியே ஓடினாள் எனக்கு ஏதோ ஓர் அசம்பாவிதம் நிகழப் போவது போல இருக்க அம்மா ,அம்மா என்று மனம் பிதற்றியது .
யாரோ ஒரு டாக்டருடன் திரும்பவந்த அந்த நர்ஸ் ஏதோ மற்ற நர்ஸ்களையும் அவரசரமாக உடன் அழைத்துக்கொண்டாள் , அதற்குள் எங்களை வெளியேற்றினார்கள் அங்கு இதயத்திற்கு ஷாக் கொடுக்கும் முயற்சி நடந்தது .பல முறை அந்த முயற்சிக்குப் பிறகு அதையும் நிறுத்தி விட்டு டாக்டர் நர்ஸைப் பார்த்தார் . ஏதோ சொல்லி விட்டு மெல்ல வெளியேறினார் .இன்னும் சில நர்ஸ்கள் வந்து அம்மாவிடம் இருந்த இணைப்புகளை அகற்றத் தொடங்கினார்கள் .

            என்னால் என் புத்திக்குள் என்ன நடக்கின்றது என்பதைப் புரிந்துக் கொண்டாலும் மனம் எதையோ ஏற்றுக் கொள்ள மறுத்தது .உடைந்துப் போனேன் .

எல்லோரும் அழுவதையும் பார்த்துக் கொண்டு இருந்த பையன் பாட்டிக்கு என்ன ஆச்சுப்பா ? என்றான்.எனக்கு என்ன சொல்வதென்று தெரியவில்லை.

எங்களைத் தேற்றிக்கொள்ளக் கூட நேரமில்லை அதற்குள் அண்ணி வந்து நாம் உடனே அவர்களை ஆம்புலன்சில் கொண்டு போகவேண்டும் இல்லையென்றால் பிரேதப் பரிசோதனை அது , இதுவென்று என்று அலைகழித்து விடுவார்கள் என்றார் .
என்னைப் பெரிய அண்ணன் கூப்பிட்டு , நீ , உன் வீட்டுக்கார அம்மாவை அழைத்துக் கொண்டு போய் அப்பாவிடம் சொல்லி அங்கு என்ன செய்ய வேண்டுமோ செய்யுங்கள் நாங்கள் உடனே இங்குச் செய்ய வேண்டியதைச் செய்கிறோம் என்றார்.

அவர் வண்டிச் சாவியை வாங்கிக் கொண்டு வெளியே வந்து வண்டியை நகர்த்தும் போதுதான் எனக்குள் சரெலென்று கத்தியைச் செருகியது போல ஒரு கேள்வி வந்தது .அப்பாவிடம் என்ன சொல்வது ? 58 வருடம் கூட வாழ்ந்த உங்கள் மனைவியை ஆம்புலன்சில் கொண்டு வருகிறார்கள் அப்பா என்று எப்படிச் சொல்வது ?
மனைவியைக் கேட்டேன் .நான் சொல்கிறேன் நீங்க வண்டியை எடுங்க என்றாள் .

பாதி வழிப் போகும் போது என்னால் வண்டி ஓட்ட முடியவில்லை .அம்மா இனி இல்லை என்பதை மனம் ஏற்றுக்கொள்ளாமல் தவித்தது .சில இடங்களில் நிறுத்தி அசுவாசப்படுத்திக் கொண்டேன்.பையன் முகத்தையே பார்த்துக் கொண்டு இருந்தான் அவன் அப்போது கேட்ட கேள்விக்கு நான் இன்னும் பதில் சொல்லவே இல்லை .எப்படிச் சொல்வது இரண்டு வருடதிற்கு இங்குத் திருப்பூர் வந்த அம்மா அப்பாவிற்குத் தெரியாமல் வேண்டாம் என்றும் மறுத்தும் கையில் சுருட்டிய பணத்தைக் கொடுத்துவிட்டுப் பத்திரமா வச்சுக்க ,எனக்கு எதாவது ஒன்னுன்னா எங்கேயும் அலையாதே என்று சொன்ன அம்மா இப்போது இல்லை என்றும் திரும்பி வரமாட்டர்கள் என்பதையும் எப்படிச் சொல்வது ?

அப்பாவிடம் சொல்வதற்கு முன் எப்படிச் சொல்வது என்று எனக்குள் பலவிதமாகசொல்லிப் பார்த்தேன் எதுவும் எனக்குச் சமாதனமாகவில்லை .

பார்த்தவுடன் வாப்பா எப்ப வந்தீங்க ? நேரா ஆஸ்பத்ரிப் போயிட்டு வற்றீங்களா என்று அவரே கேட்டார் . சொன்னேன் .அம்மாவுக்கு ரொம்ப முடியலைப்பா .ஆஸ்பத்ரியிலக் கூட்டிட்டுப் போகச் சொல்லிட்டாங்க .
என்னை நிமிர்ந்து ஒரு தரம் பார்த்தார் .அவருக்குப் புரிந்து விட்டது .அவர் அப்பா ஆச்சே ? சில நிமிடம் மவுனமாக இருந்தார் .போயிட்டியா என்னை விட்டுட்டு என்பது போல இருந்தது அந்த வெறுமை நிறைந்த பார்வையில் .சரி ஆகறதைப் பாருங்க என்றார் அமைதியாக .என்னால் அந்த நிமிடத்தில் இந்த உலகத்தின் எல்லா நிகழ்வின் மேலும் கோபமாய் வந்தது .அவர்களை இருவரையும் பிரித்துப் பார்க்கும் சக்தி என்னுள் இல்லை .

வாசலுக்கு ஆம்புலன்ஸ் வந்தது . ஃபிரீசர் பாக்ஸ் வரத் தாமதமானதால் அம்மாவை ஆம்புலன்சிலிருந்து எடுக்கவில்லை வைத்து இருந்தோம்.அப்பா வெளியே வரவில்லை .நாங்கள் பயத்தில் அவரையே பார்த்துக் கொண்டு இருந்தோம் .வெகு நேரம் குனிந்த தலையுடன் அமர்ந்து இருந்தார் .எனக்கு அப்போது சட்டெனெ நினைவுக்கு வந்தவர் அப்பாவின் நெருங்கிய நண்பர் .அவருக்கு அம்மா மருத்துவமனையில் சேர்த்தது மட்டும்தான் தெரியும் .அதற்கு நான் சொல்ல மறந்தது அப்போதுதான் ஞாபகம் வந்தது.அப்பாவுக்கு எங்களை விட அவர் மாதிரி நண்பர் உடன் இருப்பது இப்போது மிக முக்கியம்  .எங்களிடம் இறக்கி வைக்க முடியாத சுமை அவர் வந்தல் குறையலாம் அவரிடம் போனில் கூப்பிட்டு சொல்லிவிட்டு  உடனே வரமுடியாவிட்டால் வண்டி அனுப்புகிறேன் என்றேன் .இல்லை உடனே வருகிறேன் என்றார்.

வந்தார் .அவரைப் பார்த்தவுடன் அப்பா களங்கியது இன்னும் சில சமயத்தில் என் நினைவின் எழுந்து அறுக்கும்.அப்பாத் தன் தாய் ,தந்தை ,எங்களில் மூத்த அண்ணன் ஒருவர் இறந்தபோது கூடத் தளர்ந்து போனதை நாங்கள் பார்க்கவில்லை .எங்களுக்கு அம்மா மட்டும்தான் இல்லை இப்போது அவருக்கு வாழ்க்கையே இல்லை என்ற எண்ணம் வந்து விட்டது .
ஃபிரீசர்ப் பாகஸ் வந்தது .அம்மாவை அதற்குள் கிடத்தினோம் .வாசலில் நிழலுக்குச் சாமியான போட்டு ரெடியாக வைத்து இருந்தோம் .அப்பா வெளியே வந்தார் ஃபிரீசர்க் கண்ணாடி மேல் கை வைத்து அம்மாவைச் சில நிமிடம் பார்த்தார் .அதற்குப் பிறகு பக்கத்தில் உள்ள சேரில் உட்கார்ந்து கொண்டார் .
எங்கள் உறவினர் மூலம் அம்மாவின் கண் தானம் பெற அரவிந்தக் கண் மருத்துவமனையிலிருந்து வந்து இருந்தார்கள்.அப்போதுதான் எனக்கும் தெரியும் .அப்பாவிடமும் அனுமதிக் கேட்டேன்.சரி என்று சொல்லிவிட்டு வீட்டுக்கு உள்ளே போய் உட்கார்ந்து கொண்டார் . நான் மட்டுமே அவர்கள் கூட இருந்தேன் .

விழி வெளிப்படலம் வெண்படலம் தாண்டி ஒரு சவ்வு ஒன்றை விலக்கிச் சின்னதாய்க் கரண்டி மாதிரி ஒரு குழியாய் ஒரு சாதனம் வைத்து ஒவ்வொரு கண்ணையும் தோண்டி எடுத்து ஒரு சின்னக் கண்ணாடிப் பெட்டிக்குள் வைத்துக் கொண்டார்கள் .பிறகு மெல்ல நரம்பால் சுற்றித் தையல் போட்டார்கள் வந்த டாக்டருக்கு உதவியாக இரண்டு பெண்கள் இருந்தார்கள் அவர்கள் கண்களை அகற்றும் வரை அம்மாவின் உடலைச் சுற்றித் துணி மறைத்துப் பிடித்துக் கொண்டதில் அவர்களுடன் நானும் ஒருவன் .கண் தானம் சிறந்த விசயம்தான் ஆனால் அதைப் பார்க்கும் வலி மிகப் பெரியது.
என் நண்பர்கள் எல்லோரும் வந்து எல்லா வேலைகளையும் பார்த்துக் கொண்டு இருந்தார்கள் .அது எனக்கே தெரியாது .அரசு எரியூட்டும் நிலையத்தில் நேரம் வாங்குவதிலிருந்து ,’காரியம்’ செய்யும் மருத்துவக் குலம் சார்ந்தவரை அழைத்துவருவது ,வருபவர்களுக்கு உணவு ஏற்பாடு,நீர்க் குடம் எடுக்க ஏரியா ஏரியாவாகக் கிணறு ,கைப் பம்பு எதுவும் கிடைக்காமல் யாரோ ஒருவரிடம் அனுமதிக் கேட்டு ஓஸ் பைப் போட்டு அடுத்தத் தெருவில் தயார் படுத்தியது இன்னும் எனக்குத் தெரியாத பல வேலைகளை என் சகோதர்களுக்குக் கூடத் தராமல் தாங்களே முன் நின்று, செய்து கொண்டு இருந்தார்கள் . எங்களைப் போல அவர்கள் எல்லோரும் அம்மாவின் கையால் உணவுச் சாப்பிட்டவர்கள் .அம்மாவை உடலை வழியனுப்ப அவர்களே எனக்குத் தூணாய் நின்றது யாரோ என்னை ஒரு பக்கம் நிலழாய்த் தாங்கியது போல இருந்தது .
எனக்கு அங்கு நடக்கும் எல்லா விசயங்களையும் நான் பார்ப்பது போல என்னை யாரோ பார்ப்பதாகப் பல முறை உணர முடிந்தது .அந்த ஊசலாட்ட சிந்தனைத் தவிர்க்க முடியாமல் என் வாழ்வு முழுவதும் தொடர்கிறது

வந்த சொந்தப் பந்தத்தில் யாரோவெல்லாம் என் உள்ளங்கை நீட்டி அந்தத் துயரத்தைப் பறிமாறிக் கொள்ளும் செயலின் போதும், அமைதியாய் இருக்கும் வீட்டில் , திடீரெனெ அப்போதைக்கு வந்த பெண்களுடன் , கூடி அழும்போதும் என்ன ஆச்சு இங்கு என்று நினைவுகளின் நழுவல்களைத் தொலைத்து அடிக்கடி மீட்டுக்கொண்டு தவிக்க நேர்ந்தது.அம்மா இனி இல்லை ,இதோடு முடிந்து விட்டது என்பது எங்கோ உள் ரணமாய் விடாமல் வலித்தது கொண்டே இருந்தது.

நேரம் குறிக்கப்பட்டது .

அம்மா எங்கள் எல்லோரையும் விட்டு நிரந்தமாகப் பிரிந்துச் செல்வதற்காகக் குறிக்கப்பட்டதான் நேரம் அது.
அதற்கான செய்முறைகள் நிறைவேறத் தொடங்கியது .அதில் ஒன்று அங்கு நீரைப் பயன் படுத்திச் செய்யும் அனைத்து வார்த்தைகளிலும் காசி ,காசி என்று சொன்னார்கள் அது பொதுவாகச் சகல இடத்து நீரினால் செய்யும் காரியங்களுக்குச் சொல்வது வழக்கம் ஆனால் அங்குப் பயன் படுத்தப்பட்ட நீர் ,அதற்குச் சில வாரங்களுக்கு முன் மாமனார்க் காசிச் சென்ற போது எடுத்து வந்த காசித் தீர்த்தமே அங்குப் பயன்படுத்தப் பட்டது .அம்மா போகும் போதும் அதிருஷ்டசாலிதான் என்று அங்கு இருந்தவர்கள் பேசிக் கொண்டது எனக்கு என்னவோ செய்தது .போகாமல் இருப்பவர்கள் ?
அம்மாவின் இறுதி மரியாதைப் பயணம் தொடங்கியது .! திண்டுக்கல் அறிவுத்திருக்கோவிலைக் கடந்து ரயில்வே பாலம் தாண்டி ஹவுசிங்போர்டு வீடுகளைத் தாண்டிப் பைப்பாஸ் ரோட்டில் உள்ள மின் மயானத்தில் எரியூட்டும் நிலையத்தில் முன் பகுதியில் அம்மாவின் உடல் கிடத்தப்பட்டது வைக்கப்பட்டது.இறுதிச் செய்முறைக்காக.பெரிய அண்ணன் செய்தார் .உள்ளே எடுத்துச் சென்று இரண்டு தண்டவாளம் போன்ற அமைப்பில் கட்டைகள் அடுக்கி அதில் மேல் அம்மாவின் உடல் கிடத்திவிட்டு உடலை எரிக்கும் ஃபர்னேஸ் கதவு உயந்தது .யாரோ இருவர் பலம் கொண்ட மட்டும் அதனுள்ளே தள்ளிக் கதவை இறக்கினார்கள் .
எல்லாம் .முடிந்து விட்டது . அடுத்த நாள் அமாராவதி என்று லேபிள் ஒட்டப்பட்ட

ஒரு மண் கலயத்தைத் தந்தார்கள் .அதற்கும் சில சிரார்தங்களைச் செய்து அதை எடுத்துக் கொண்டு கொடுமுடி ஆற்றில் விட்டுவிட்டு வந்தோம். நான்காம் நாள் திருப்பூர்த் திரும்பிய போது, பக்கத்து வீட்டில் அம்மாவின் மரணம் பற்றி விசாரித்து விட்டு எனக்கு வந்த அகலாமான ஒரு கூரியர் கவர் கொடுத்தார்கள்
.

வீட்டுக்குள் சென்று  கவரைப் பிரித்தேன்.அரவிந்த் கண் மருத்துவமனையிலிருந்து – அம்மாவிடம் பெற்ற கண்ணுக்கான  ’கண்தானப் பாராட்டுச் சான்றிதழ்’  அது.

வாழும் போது இந்த உலகத்தில் படிக்காததால்  எங்கள் அம்மா எந்த சான்றிதழும் பெற்றதில்லை ஆனால்  இறந்த பிறகு இரண்டு  சான்றிதழ் கொடுத்துச் சென்று இருக்கிறார்கள் அதில் இதுவும் ஒன்று.( இன்னொன்று இறப்புச் சான்றிதழ் ).

வாழ்ந்த அடையாளம் .

இருக்கும் வரை அம்மா எங்கள் எல்லோரையும் வாழவைத்தார்கள் .இறந்த பிறகும் யாருடைய வாழ்விலோ ஒளி கொடுத்து வாழ்ந்து கொண்டு இருக்கிறார்கள் இப்போதும்…

எந்த அம்மாக்களுக்கும், எப்போதும் சாவில்லை …

Posted in Uncategorized

வாழ்க்கை காத்து இருக்கிறது .

v12

இனிய வேதாத்ரிய பயணிகளே

 வாழ்கவளமுடன்

                             சில வாரங்களுக்கு முன் ”யோகமும் மனித மாண்பும் “ ஆழியார் தேர்வு முடிவுகள் வந்தன அதனை தொடர்ந்து பல்கலைக கழக முடிவுகளும் நேற்று ( 10-09-2014 ) வந்தன .தேர்வுகளை நடத்த சேவை செய்த அனைத்து அருட்தொண்டர்கள் , கல்லூரி ஆசிரிய பெருமக்கள் அனைவரையும் வாழ்த்தி ,நன்றி தெரிவித்து கொள்ளலாம்.வாழ்க வளமுடன் .

 நன்றி.

                                     அனேகமாக மிக சாதரண அணுகுமுறை உணர்வோடு ஏனைய கல்வி போல ,பயில வந்து சேர்ந்த  அன்பர்கள் பலரும் இங்கு வாரம் மூன்று நாள் கலை 5.30 மணிக்கு வகுப்புகள் ,மாதம் ஒரு சிறப்பு பயிற்சி , கைவலிக்க அஸைன்மெண்ட்கள் ,இறுதியாக இண்டெர்னல் எளியமுறை உடற் பயிற்சி  மற்றும் யோக பயிற்சிகள் தேர்வு ,ஆழியாரில் – எழுத்து மற்றும் எளியமுறை + யோக பயிற்சிகள் (மூன்று இனிய நாள்! ) இறுதியாக எழுத்து தேர்வுகள்.என சரமாரியாக சவால்களை சந்தித்தார்கள் 

                                      பல அலுவலகங்களில் தேர்வு எழுத விடுமுறை கேட்டால் , இப்படியும் பொய் சொல்வார்களோ என்ற ஓர சிரிப்புடன் அனுமதி பெற்று ! தேர்வு எழுத போக படித்து ,வெகு நாளைக்கு பிறகு தேர்வு நுழைவு சீட்டு வரிசைஎண் கண்டு பிடிக்க ஓட்டம் … இத்தனை நடந்தாலும் இதில் ஒரு சுவாரஷ்யம் என்னவென்றால் பல வீடுகளில் குழந்தைகள், தேர்வு எழுதும் பெற்றோர்களுக்கும் அல்லது மூத்த சகோதர சகோதரிகளுக்கு வாழ்த்து சொல்லி அனுப்பிவைத்த விசயம்தான். இதில் பல பெற்றோர்கள் தேர்வில் அதிக மனப்பாடம் ஆகாமல் தவித்து இதை போலத்தானே என் குழந்தையும் கஷ்டபடுவான் . இனி குழந்தைகளை படி படி திட்டமாட்டேன் என சங்கல்பம் எடுத்து கொண்டதை பார்த்த போது –  வேத்தாத்ரிய கல்வி ,தேர்வை விட வாழ்வில் வெற்றி பெற்று விட்டதை  பார்க்க முடிந்தது . குருவினால் ஏற்பட்ட அற்புதம் !

                                 வெற்றி பெற்றவர்கள் மற்றும் ஏதேனும் சில காரணங்களால் தேர்வு எழுதாமல் போனவர்களுக்கும் இந்த உள்ளுணர்வு கல்வியின் பயன் கருவமைப்பில் பதிவாய் போய் சேர்ந்து இருக்கும் .வருங்காலம் முழுதும் அதனால் எண்ணங்களாக செயலாக மலர குருவின் அருள் தொடர்பு கிடைக்கட்டும் அதோடு இல்லாமல் அவரவர் தகுதிக்கேற்ப்ப கல்வியை தொடருங்கள் மன்றங்களோடு  தொடர்பு எப்போது அவசியம் .வெளியுலக தொடர்பும் வாழ்வின் நோக்கமும் பிரிக்க முடியாதது அதில் தொடந்து வெற்றி பெற தொடர்ந்து உற்சாகமும் ஊக்கமும் பெற மேலும் தொடர்ந்து படியுங்கள் ..இளங்கலை ,முதுகலை ,அட்வான்ஸ் டிப்ளோமா என பட்டங்கள் உங்களுக்காக காத்து இருக்கிறது .தொடருங்கள் .

                            பிரபஞ்ச காந்தம் – ஜீவகாந்தமாக தன்மாற்றம் அடைந்து நடத்தும் திருவிளையாடல்களை மகரிஷி வழியில் மேலும் மேலும் ஆராய்ந்து எளிமை படுத்தி உணர்ந்துகொள்ளும் தன்மைக்கு விஞ்ஞான விளக்கத்தை வடிவமைத்து தெரிவிக்கும் ஆற்றலை தமிழ்கூறும் நல்லுலகம் மற்றும் இந்த பிரபஞ்ச மனிதர்கள் ஒவ்வொருவரும் அறிய வழிவகை செய்ய சங்கல்பம் எடுத்து கொள்ளுங்கள்.உடற்பயிற்சியும் ,தவமும் ,தற்சோதனையும் இடைவிடாது தொடர வாழ்க்கை அனுபவங்களாக அவற்றை மாற்றிகொள்ளுங்கள் ஒரு குறிப்பிட்ட பக்குவம் உணர்ந்த்வுடன் அருகில் உள்ள மன்றங்களுக்கு சேவை கரம் நீட்டுங்கள் .சேவை பிரபஞ்ச கருமையத்தின் முகவரி.

 முடிவாக தலைப்பை பற்றி …குருவின் அவசியம்

                          தந்தை தாய் ஈருடல் சேர்ந்து ஒரு அழகிய ஐம்பூத பானை போல சமூக உதவியுடன்  நம்மை இந்த உலக தரிசனத்தை அனுபோகிக்க பூலோக நந்தவனத்திர்க்கு  தந்து இருக்கிறார்கள் .அந்த பானை பல பேரின் ஆயுளில் காற்று மட்டுமே நிரம்பி கடைசிவரை பயணிக்கிறது ,பல பேர் தீர்த்த குடங்களாகவும் ,சில பேர் அமுதம் நிரம்பிய குடமாகவும் சென்று முழுமை பெறுகிறார்கள்  குருவின் துணை இதர்க்கு உதவி செய்து இருக்கிறது  .இன்னும் சொல்ல போனால் பெற்றோரை மதிக்க சொல்லி தந்ததே குருவின் முதல் வழிகாட்டல் மூலம் உணர்ந்தோம் .

                         நம் அருட்தந்தை வேதாத்திரி மஹரிசி விஞ்ஞானத்தையும் -மெய்ஞானத்தையும் இணைக்க தன் வாழ்நாளை முழுவதையும் அர்பணித்து பாதை அமைத்து தந்து இருக்கிறார்.அதில் பயணிக்க நம்மை தந்தால் போதும் .கை பிடித்து அழைத்து செல்ல வான்காந்த சக்தியாய் நமக்காக காத்து இருக்கிறார்.உங்கள் இடர்பாடுகளை அவர்களிடம் அவரே களைவார் என்று ஆழமாக நம்புங்கள் .

 மேலும் ஒரு சின்ன வேண்டுகோள்

                       பல அன்பர்கள் அறிமுக வகுப்புகள் ,அகத்தாய்வு நிலைகள் ,அருள்நிதியர் பயிற்சி இல்லாமல் ( அத்தனையும் இதிலே அடங்கும் , இருந்தாலும் )  கல்வியாக மட்டுமே முழுமை நல வாழ்விற்க்கு யோகமும் மனித மாண்பை கற்றவர்கள் ,குருவின் முழுமை உணர்வை மேலும் பெற தொடருங்கள் .இது ஒரு அனுபவம் மட்டுமல்ல ஆன்ம விழிப்புணர்வு பயிற்சி .இதை கெட்டியாக பிடித்து பயணத்தை தொடருங்கள் வாழ்க்கை காத்து இருக்கிறது உங்களுக்காக !

                          அனைவரும் உங்கள் இந்த கல்வி அனுபவத்தை ( தேர்ச்சி இல்லாமல் இருந்தாலும் பரவாயில்லை ) உங்கள் அன்பு குடும்பத்திர்க்கு அர்பணியுங்கள் .நான் கடந்த இரு மாதங்களுக்கு முன் எங்களை விட்டு பஞ்ச பூதத்தில் கலந்த , தாய் அமராவதிக்கு சமர்பிக்கிறேன்.

 

வாழ்க வையகம் வாழ்க வையகம் வாழ்க வளமுடன்.

Posted in Uncategorized

கேள்விதான் குரு

கேள்விதான் குரு.

Posted in ஆன்மீகம்

கேள்விதான் குரு

                                Image                                     வாழ்வில் குரு என்பவர் பற்றி ஒவ்வொருவருக்குள்ளும் பல கேள்விகள் புதைந்து கிடக்கின்றன . அறியாத வயதில் வித்தைக் கற்றுக் கொடுப்பவரும் , உலகம் தெரிந்தவயதில் தொழில் கற்றுக் கொடுப்பவரும் ,ஓரளவு வாழ்வைப் புரிந்த வயதில் வாழ்வியல் சீக்கலைத் தீர்க்கும் உபாயம் சொல்பவரும் குருவாகவே மதிக்கபடுகிறார் …இவர்கள், தான் கற்றவற்றை மட்டும்  உங்களுக்கு போதிக்கவில்லை. தான் படித்தது பார்த்ததை கேட்டதை தன் அறிவில் உணர்ந்ததை என்ற அனுபவகளின் மூலம் கிடைத்தவற்றை கொண்டு உங்களுக்கு வழிகாட்டும்போது சில சமயம் அது நடைமுறையில் மேலே தூக்கி வீசபட்டக் காசு தரையை அடையும்போது பூவாத் தலையா என்பதை போல, வெற்றியும் தரலாம் தோழ்வியும் தரலாம்.ஆனால் வாழ்வின் மத்திய பகுதியில் ஓரளவு உலக இன்ப துன்ப அனுபவமும் கடந்து விட்ட பின்பு இதை எப்படி ,யார் மூலம் தீர்ப்பேன் என்று  ஒரு கேள்வி வருகிறதே அதாவது மேலே வீசபட்டக் காசு தரையைத் தொடாமல் காணாது போன சமயம் ஒரு  கேள்வி வருமே … அப்போது அந்தக் கேள்விதான் குரு.

Image

குருவின் தேவை.

                             அறுபது வயதைக் கடந்த பெரியவர் தனது பெண்ணை மிகப் பாசத்துடுடன் வளர்த்து மிகப் பல இடங்களில் தேடி அத்தனை பொருத்தமும் பொருந்திய வரன் பார்த்து, முடித்த திருமணத்தில், பல தீர்க்க முடியாத குழப்பத்தைச் சந்திக்கும்போதும் எங்குத் தவறு நடந்தது என்று மனசைக் கேள்விகள் குடையும்போதும்

                           சரியான நேரத்தில் முழு ஆள் மற்றும் பொறுள் பலத்துடன் தொடங்கிய கட்டிடத்தின் முழுமை அடைய முடியாமல் க்ரஹபிரவேசம் செய்ய முடியாமல் வேதனைப் பார்வையில் என்ன குறை என்று தன்னைத் தானே குறைபட்டுத் தவிக்கும்போது,

                         பல வருடம் பல கஷ்ட நஷ்டங்களில் பங்கு கொண்டு கூடவே இருந்த பல வருடப் பங்குதாரரின் போக்கில் பிரிந்துப் போகும் அளவுக்குத் திடீர் மாற்றம் காணும்போதும் ,
தன் வாழ்வின் அத்தனையும், குடும்பம் குடும்பம் என்று சதா அர்பணித்து இருந்தவகளின் கடைசிக் கட்ட வாழ்க்கை முதியோர் இல்லத்தில் இருக்கும்போது என்ன தவறு செய்தோம் என்று திரும்பிப் பார்த்து விடைக் கிடைக்கமால் வளர்த்தவர்களுக்கே சாபம் கொடுத்துக் கொண்டு இருக்கும் பொறுக்க முடியாத பெற்றோர் எனும் நடமாடும் தெய்வங்களின் வேதனையும் ,

                        எத்தைனையோ வெற்றிப் பெற்றாலும் அவ்வளவு வெற்றிக்குப் பிறகும் பல சாதனையாளர்கள் தனது வாழ்க்கையில் ஒரு இடத்தில் திரும்பிப் பார்க்கும் போது குறிக்கோள் மட்டுமே அடைந்துத் தனக்கு வேறு ஏதோ ஒரு நிறைவை வாழ்வில் தொலைத்த சோகம் பிடுங்கித் திங்குமே அப்போதும்,
அன்பு வைத்தவர்களின் மரணத்தின் பிரிவு ஏன் என்ற மனம் அழுந்தித் தவிக்கும்போதும் , எத்தனை மருத்துவர் பார்த்தும் தீராதா கவலையின் கடுமையும் சந்திக்கும்போது ..

                           இப்படியான இன்னும் பல்லாயிரம் வாழ்க்கைக் கேள்விகள் தான் – தனது – என்னால் என்ற முனைப்பின் எல்லைகளுக்குள் கிடைக்காத வாழ்கையின் முடிச்சுகளுக்குப் பதிலை வெளியே தேடும்போது அந்தக் கேள்விகள் குருவின் திசை நோக்கியும் அவரின் முக்கியத்துவத்தினையும் சொல்கிறது .ஆனால் ஒரு நல்ல குரு அந்தப் பதிலை நம்மிடம் இருந்தே நமக்குப் பெற்றுத் தருகிறார் என்பது ஓர் அபூர்வ உண்மையும் வேடிக்கையும்கூட என்பதை வேறு ஒரு இடத்தில் புரிந்து கொள்வோம்..
இதில் இன்னொரு புண்ணியவான்கள் இருக்கிறார்கள் .அவர்கள் பக்தி யோகத்தில் பழுத்த பிறகு தான் எங்கோ நிற்கிறோம் கடந்து போக வேண்டிய பாதை ஒன்று இருக்கிறது என்று குருவின் அவசியத்தை தேடுபவர்கள்கள் …

                      இன்னும் ஒரு கரு(வமைப்பில்)வில் திரு என்ற கூட்டம் உண்டு .பிறவியே ஞான மார்கம் என்ற ரீதியில் குருவை தேடுபவர்கள் .முன்னோர்கள் பூண்ணியத்தை அனுபவிக்க வந்த அவர்கள் குருவின் தேடலும் , அத்தனையின் நோக்கமும் ஒன்றுதான் அது வாழ்வு எனும் மதில் சுவர்க்கு அப்பால் இருக்கும் ஏதோ ஒன்று இருக்கிறது அதை புரிந்து கொள்வதுவேயாகும்

Imageகுருவின் அடையாளம் !

                                     சரி குருவின் தேவை புரிகிறது .யார் குரு ? அடையாளம் என்ன ? நாம் நம் அத்தனை பிரச்சனையும் அவரிடம் சொல்ல வேண்டுமா அல்லது அவரே அறிந்து கொள்வாரா அப்படி அவர் ஏதாவது அற்புதம் நிகழ்த்துபவரா ? அதைவிடவும் அவர் நமது வாழ்கையின் சகலப் பிரச்னைக்கும் தீர்வுச் சொல்லுவாரா ? ஒருவேளை அல்லது எல்லாமே விதி என்று கை கழுவி விட்டுவாரா ?

                                   கேள்விகள்தான் ஓர் ஆன்மாத் தன்னைப் பற்றி அறிந்து கொள்ளச் செய்யும் முதல் முயற்சியின் விளைவு .இன்னும் எளிதாக சொல்ல வேண்டுமானால் எங்கிருந்து இந்த ஆன்மா அல்லது உயிர் அல்லது சக்தி வந்ததோ அந்த இடத்தை அடைய தன்னை தயார் செய்து கொள்கிறதோ அப்போதுதான் கேள்வி பிறக்கும். இங்கு கேள்விகள் ஆன்மாவினுடையது .சந்தேகம் ஏற்கனவே பதிந்துள்ள மனதின் அனுபவம் என்ற ஒன்றை மட்டுமே நம்பும் இறந்த காலத்திர்க்குரியது.எனவே ”கறை” நல்லது என்ற விளம்பர வார்தயை போல கேள்வியும் நல்லதுதான் அதிலும் மனதை தாண்டிய முதன் முதலிலாக ஒரு கேள்வி வருமே அதுதான் ஆன்மாவின் தன்னை அறியும் முயற்சி.பிரபஞ்சத்தின் குரல் அது.

                                 ஆனால் எப்போதுமே எந்த செயலிலுமே ஒரு கேள்வி எழும்போதே ஒரு பதில் வரும் ,அதை மதிப்பதில், மிக முக்கியத்துவம் இருக்க வேண்டும் .ஒருவரை பார்க்க நீங்கள் கிளம்புகிறீர்கள் என்று வைத்து கொள்வோம் , அவர் இப்போது இருக்கமாட்டாரே அல்லது இப்போது வேண்டாம் என்றோ ஒரு குரல் வரும் அதுதான் அவருக்கும் நமக்குமிடையே இயற்கை பிணைப்பு .ஆனால் உடனே மனசின் தேவை உணர்வு மேலோங்கி, போய்தான் பார்ப்போமே என்று சொல்லுமே அதை கேட்டு அங்குபோனால் அது வேறொரு விளைவை தரும்.ஆனால் தேவையின் பொருட்டு பல சமயத்தில் அதர்கே நாம் மதிப்பு தருகிறோம் .

Image

                      எனவே நம் இப்போதைய பாதை எதுவாக இருந்தாலும் அதை பற்றி ஆனால் நோக்கம் முழுமைப்பேறு .அதை நோக்கிய பயணத்திர்க்கு குருவின் திருமேனியை கண்டு அவரின் பெயரை வாழ்த்தி அவரின் அருள்வார்தைகளை மதித்து அவர் உருவை சிந்தித்து பின்பற்றுவோம் ..வாழ்க வளமுடன் .குருவின் அருள்.

Tagged with: , , ,
Posted in Uncategorized

வேதாத்திரி மகரிஷி – அபூர்வ வீடியோ

பார்க்கும்போதெல்லம் ,பேசும்போதெல்லாம் என்னை கண்ணீரில் ஆழ்த்தும் அந்த மஹானின் காணொளி காட்சி .

Posted in Uncategorized